/* */

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கி துவக்கம்

தமிழகத்திலேயே முதல் முறையாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கி துவங்கப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கி துவக்கம்
X

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கியை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் புத்தக வாசிப்பு திறனை ஊக்குவிக்கும் வகையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் புத்தக வங்கியை திறந்து வைத்தார்.

இந்த புத்தக வங்கியில் இருந்து பொதுமக்களும், மாணவர்களும் எவ்வித கட்டணமும் இன்றி புத்தகங்களை தங்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்று படித்துவிட்டு மீண்டும் கொண்டு வந்து வைக்கலாம். மேலும் தங்களிடம் உள்ள புத்தகங்களை நன்கொடையாக வழங்க விரும்பினாலும் இந்த புத்தக வங்கியில் வைக்கலாம். தமிழகத்திலேயே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இலவச புத்தக வங்கி துவக்கி இருப்பது திருவாரூரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியகோட்டி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Dec 2021 1:43 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?