/* */

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கிய கலெக்டர்

மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பரிசுகளை வழங்கினார்.

HIGHLIGHTS

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு  பரிசு வழங்கிய கலெக்டர்
X

சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. 

திருவாரூர் மாவட்ட நிர்வாகம், திருவாரூர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான அரசு ஊழியர்கள்; மற்றும் மாணவ, மாணவியர்களுக்கான சதுரங்கப்போட்டியில் பொதுப்பிரிவு, 11 வயது சிறுவர், 14 வயது சிறுவர், 18 வயது சிறுவர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.

மொத்தம், பொதுப்பிரிவில் 15 பேரும், சிறுவர்கள் பிரிவில் 31 பேரும் கலந்து கொண்டனர். இதில் பொதுப்பிரிவில் செல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் என்.சரவணன் முதல்பரிசும், வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தை சேர்ந்த விமல்ராவ் இரண்டாம் பரிசும், திருவாரூர் மாவட்ட கருவூலத்தை சேர்ந்த எம்.விமலாதித்தன் மூன்றாம் பரிசும் பெற்றனர். பெண்கள் பிரிவில் திருவாரூர் வருவாய் நீதிமன்றத்தை சேர்ந்த சங்கரீஸ்வரி முதல் பரிசும், சூரனூர் எஸ்.வசந்தி இரண்டாம் பரிசும், திருவாரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை சேர்ந்த கே.வாலண்டினா மூன்றாம் பரிசியையும் பெற்றனர். இவர்களுக்கு, பரிசு, நற்சான்றிதழை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் புண்ணியக்கோட்டி, திருவாரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் முருகுவேந்தன், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழக செயலர் பாலகுணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 4 Dec 2021 1:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தோல்வி கண்டு துவளாதீர்..! வீழ்ச்சி எழுச்சிக்கான முயற்சி..!
  2. லைஃப்ஸ்டைல்
    உனை பிரியாத வரவேண்டும் என்னுயிரே..!
  3. வீடியோ
    சினிமா படத்தில்ல இருக்கிறது எல்லாம் நல்லவா இருக்கு? ...
  4. லைஃப்ஸ்டைல்
    குடும்ப உறவாகும் நட்பு..! இருபக்க மகிழ்ச்சி..!
  5. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ் MLA ரூபி மனோகரன் செய்தியாளர் சந்திப்பு | Ruby...
  6. வீடியோ
    அதெல்லாம் அவுங்க விருப்பம்!மிஷ்கினுக்கு அறிவுரை சொன்ன முதியவர்! சொல்ல...
  7. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  8. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  9. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  10. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!