/* */

திருவாரூர்: ஊட்டச்சத்து உணவு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி

திருவாரூரில் ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

HIGHLIGHTS

திருவாரூர்: ஊட்டச்சத்து உணவு முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி
X

திருவாரூரில் ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திருவாரூர் மாவட்டத்தில் இந்திய நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் மற்றும் சர்வதேச பெண்கள் தின விழா.மார்ச் 7-ஆம் தேதி முதல் 13-ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி திருவாரூர் வேலுடையார் பள்ளியிலிருந்து துவங்கி இளவங்கர்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் முடிவுற்றது.

இந்த பேரணியை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இப்பேரணியில் இயற்கை முறையில் விளைவித்த உணவு பொருட்களை உட்கொள்வது குறித்தும், சிறுதானிய உணவின் முக்கியத்துவம் குறித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.பேரணியைத் தொடர்ந்து இளவங்கர்குடி பகுதியில் ஊட்டச்சத்து நிறைந்த மரக்கன்றுகள் நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிராமிய ஊரக சுயவேலைவாய்ப்பு திட்ட இயக்குனர் கீதா தினேஷ், மகளிர் திட்ட உதவி திட்டஅலுவலர் தில்லைமணி கண்ணன், ஜெயம் கல்வி அறக்கட்டளை திட்டஅலுவலர் பலராமன், மேலாளர் பாலாஜி மற்றும் சுய உதவி குழுவை சார்ந்த பெண்கள், பயிற்சி மாணவிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 March 2022 12:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?