/* */

திருவாரூரில் தனியார் நிறுவனத்திற்கான பணிநியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்

தமிழக முதல்வரின் அனுமதி பெற்று, இந்த ஆண்டு திருவாரூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெயரில் தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

திருவாரூரில் தனியார் நிறுவனத்திற்கான பணிநியமன ஆணையினை அமைச்சர் வழங்கினார்
X

திருவாரூரில் தனியார் நிறுவனத்திற்கான பணிநியமன ஆணையினை தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், தொழிலாளர் நலன்- திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் பங்கேற்று, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் முகாம் மூலம் மனு அளித்தவர்களுக்கு தனியார் நிறுவனத்திற்கான பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் அரசு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்களையும் வழங்கினார்.

தொடர்ந்து அமைச்சர் பேசியபோது: தேர்தல் நேரத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு 100 நாட்களில் நிறைவேற்றித் தருவேன் என முதல்வர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில், இதுவரை 50 சதவீத மக்களுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன .அதன்படி, இன்று வேலைவாய்ப்பு துறை மூலமாக பணி ஆணை வழங்குகிறோம். விரைவில், திறன் மேம்பாட்டுத் துறையின் மூலமாக, முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, பல லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க கூடிய நிலையை உருவாக்குவோம். மேலும், தமிழக முதல்வரின் அனுமதி பெற்று, இந்த ஆண்டு திருவாரூரில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பெயரில் தொழில் பயிற்சி மையம் உருவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இயக்குநர்.கொ.வீரராகவராவ், மாவட்ட ஆட்சியர் .ப.காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .வி.ஆர்.ஸ்ரீனிவாசன, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலை வாணன் , மாவட்டஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை) .சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் .ப.சிதம்பரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் .சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்.பாலசந்திரன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் சோம.அழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 23 July 2021 4:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?