/* */

சித்த மருத்துவத்தை முழுவீச்சில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்-

திருவாரூர்மாவட்டம்-.

HIGHLIGHTS

சித்த மருத்துவத்தை முழுவீச்சில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்-
X

தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்பைப்போல, சித்த மருத்துவ சிகிச்சையை உடனடியாக பயன்படுத்த வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் கோரிக்கை வைத்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை காரணமாக தொற்றுகளின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டுவருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலின் தீவிரத்தால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தமிழ்நாடு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை மூலம் செயல்படும் சித்த மருத்துவத்தை மீண்டும் முழுவீச்சில் தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

கடந்த அண்டு மார்ச் இறுதியில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமெடுக்கத் தொடங்கியபோது, மருத்துவர்களும் மக்களும் அரசும் அச்சம் அடைந்தனர். உலகம் முழுவதும் ஊரடங்கில் முடங்கியது.

ஆனால், நமது சித்த மருத்துவர்கள் கொரோனாவை தைரியமாக எதிர்கொள்ள கபசுரக் குடிநீரை பரிந்துரைத்தார்கள். கபசுரக் குடிநீரால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்ததை அனுபவப் பூர்வமாக அறிந்த தமிழக அரசும் கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் வழங்க உத்தரவிட்டது..

இதற்கு முன்பு, தமிழகத்தில் சிக்குன் குன்யா, டெங்கு போன்ற காய்ச்சல் மக்களை பாதித்தபோது, அப்போது சித்த மருத்துவம்தான் அரசுக்கு கைகொடுத்தது. நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு வழங்கப்பட்டது.

அரசு பொது மருத்துவமனைகளில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. இந்த சூழலில்தான், கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கையில் ஒவ்வொரு நாளும் புதிய உச்சங்கள் பதிவாகி வருகிறது. கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.

தமிழ்நாடு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ துறை மற்றும் மத்திய அரசின் ஆயூஷ் திட்டத்தின் மூலம் செயல்படும் சித்த மருத்துவம் மற்றும் ஓமியோபதி மருத்துவ மனைகள் மாவட்ட தலைமை மருத்துவ மனைகள்,தாலுக்கா மருத்துவ மனைகள்,தேர்வு செய்யப்பட்ட முதல் நிலை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பெயரளவில் மட்டுமே செயல்படுகின்றன.

குறிப்பாக கொரோனா நோய் தொற்று அறிகுறிகளான தொண்டை வலி,சுரம்,சளி,இருமல்,தொண்டை வீக்கம்,தலைவலி,வயிற்று போக்கு இவற்றை தடுக்கும் வகையில் சிறப்பான மருந்துகள் இருக்கிறது என்ற நிலையில் குறிப்பாக வது பிடித்தல்,ஒம பொட்டணம் நுகர்தல்.யோகா,தியான பயிற்சி குறித்த விழிப்புணர்வும்,அரசு மருத்துவ மனையில் செயல்படும் இந்திய மருத்துவ துறையின் செயல்பாடுகள் மிக குறைவாகவே இருக்கிறது.

இந்நிலையில் , தமிழக அரசு கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கவும் முதல் அலையின்போது மேற்கொள்ளப்பட்டதுபோல, இந்த முறையும் சித்த மருத்துவத்தை பயன்படுத்த வேண்டும் மேலும்

தமிழக அரசு சித்த மருத்துவத்தின் பக்கம் கவனத்தை திருப்பி மேற்படி மருத்துவ மனையின் செயல்பாடுகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லவும்,கிராமங்களில் மருத்துவ முகாம்களை சமுக இடைவெளியில் நடத்திட உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்

Updated On: 14 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?