/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, வல்லம், பள்ளியக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் நடைபெறும் சிறப்பு தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர் வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜீன் 12 ஆம் தேதி தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்கப்படவுள்ளது. கரூர் மாவட்டத்தில் 10 பணிகள், 60.60 கி.மீ.நீளத்துக்கு ரூ.1.60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 33 பணிகள், 123.65 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.7.01 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 185 பணிகள், 1,169.14 கி.மீட்டர் நீளத்துக்கு, ரூ.20.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் 174 பணிகள் 1,282.35 கி.மீட்டர் தூரத்துக்கு 16.34 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 89 பணிகள் 574 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.5.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 26 பணிகள் 460.85 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.5.73 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பணிகள் 25.54 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.83 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதே போல் கடலூர் மாவட்டத்தில் 58 பணிகள், 202 கி.மீட்டர் நீளத்துக்கு ரூ.2.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 647 பணிகள், 4,061 கி.மீட்டர் நீளத்தில் ரூ.65 கோடியே 10 லட்சத்தி 50 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை ஆய்வு செய்ய திருச்சிக்கு விமான மூலம் வந்த முதலமைச்சர் கல்லணையில் நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்.பின்னர் பொதுப்பணிதுறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

பின்னர் தஞ்சாவூர் அருகே வல்லம் பகுதியில் உள்ள முதலைமுத்துவாரி, பள்ளியஅக்ஹரஹாரம் பகுதியில் வெண்ணாறில் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தார்.

Updated On: 12 Jun 2021 1:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  2. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  3. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  4. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  5. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  7. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  8. வீடியோ
    😍கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா😍| Kavin-ன் எல்லைமீறிய அட்டகாசமான...
  9. வீடியோ
    4 ஸ்பின்னர்கள் எதற்கு ? Rohit சொன்ன ரகசியம் !#rohitsharma #teamindia...
  10. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!