/* */

தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆறுதல்

தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல்.

HIGHLIGHTS

தஞ்சை தேர் விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சிபிஎம் பாலகிருஷ்ணன் ஆறுதல்
X

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மா.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.

களிமேடு விபத்தில் அரசையோ, அரசு அதிகாரிகளை குற்றம்சாட்டுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை என தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி.

தஞ்சாவூர் அருகே களிமேட்டில், நேற்று முன்தினம் நடந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்தது இல்லை, எதிர்பாராமல் நடைபெற்ற விபத்து. இதை விபத்தாக தான் பார்க்க வேண்டும், அதை விட்டுவிட்டு அரசு மீது, அதிகாரிகள் மீது குற்றம் சுமத்த கூடாது. எந்த விதத்திலும் அரசு பொறுப்பாகாது. இதில் அரசையோ, அரசு அதிகாரிகளை குற்றம்சாட்டுவது எந்த விதத்திலும் நியாயமே இல்லை, எனவே எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள், உயிரிழப்புகள் ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வழங்கியுள்ள நிவாரணம் போதுமானதாக இருக்காது. எனவே அவர்களுக்கு நிவாரணம் கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Updated On: 28 April 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  4. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  6. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  7. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  8. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  9. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  10. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...