/* */

லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி போலீஸார் பறிமுதல்

சந்தேகப்படும்படி நிறுத்தி இருந்த லாரியை சோதனை செய்ததில் 9.1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது

HIGHLIGHTS

லாரியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  ரேஷன் அரிசி  போலீஸார் பறிமுதல்
X

ரேஷன் அரிசி கடத்த இருந்த  லாரி

தஞ்சாவூரில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு கடத்துவதற்காக, லாரியில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 9.1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்த போலீஸார் இது தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மானம்புச்சாவடி, வைக்கோல்கார தெருவில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தஞ்சை குடிமைப் பொருள் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் ப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர் விஜய், தலைமை காவலர் செல்வராஜ், மணிகண்டன் ஆகியோர் அப்பகுதியில் திடீர சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியை சோதனை செய்தனர். அதில் 9.1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ரேஷன் அரியை பறிமுதல் செய்த போலீசார். இது தொடர்பாக திருச்சி மாவட்டம் வரகநேரியை சேர்ந்த லாரி உரிமையாளர் அருள் (25), அவரது உதவியாளர்கள் அய்யம்பேட்டை ஜோதிமுருகன் (26), மானம்புச்சாவடி காஜா மொய்தீன் (42) ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தஞ்சாவூர் நகர் பகுதியில் பலரிடம் ரேஷன் அரிசியை வாங்கி, நாமக்கல்லிற்கு கோழிப் பண்ணைக்கு அனுப்புவது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தினரிடம், போலீசார் ஒப்படைத்தனர்.

Updated On: 22 Jan 2022 1:00 PM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  3. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  5. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
  7. லைஃப்ஸ்டைல்
    ‘தனியே ... தன்னந்தனியே ...’ - வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்!
  8. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  10. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?