/* */

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடந்தது

மஹா சனி பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம்பெருமானுக்கு ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்கள் இன்றி பிரதோஷ வழிபாடு நடந்தது
X

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் ஆவணி மாதத்தின் இரண்டாவது பிரதோஷம் மஹா சனி பிரதோஷமாக வந்தையொட்டி, பெருவுடையாருக்கு ஏற்ற பெருநந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், இளநீர் கரும்புச்சாறு உள்ளிட்ட ஒன்பது வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்களுக்கு வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் சனி பிரதோஷம் அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோவிலில் வழிபாடு செய்வார்கள். ஆனால் இந்த ஆண்டு பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் பக்தர்கள் யாரும் இன்றி பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

Updated On: 4 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  2. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  3. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  7. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்
  9. ஈரோடு
    ஆப்பக்கூடலில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே தொழிற்சாலையை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டம்