/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 376 பேர் மனு அளிப்பு

பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 376  பேர் மனு அளிப்பு
X

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்சியர் தீபக்ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் : பொதுமக்களின் குறைகளை மனுக்களாக பெற்று தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், முதியோர் உதவித்தொகை, வேலை வாய்ப்பு, கல்வி உதவித் தொகை, பட்டா மாறுதல்; போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 376 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) எச்.எஸ்.ஸ்ரீகாந்த் ,மாவட்டவருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பது... தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் அடிப்படைச் சேவைகளில் மக்கள் குறைகளைச் சந்திக்கும்போது, உரிய அலுவலர்களை அணுகிக் குறைகளைத் தெரிவிக்கும் நாளாகும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று, “மக்கள் குறை தீர்க்கும் நாள்” கடைபிடிக்கப்படுகிறது. அன்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் அந்தந்த பகுதிகளில் வாழ்கிற மக்கள் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம்.

இது தவிர, மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது மாவட்ட வருவாய் அலுவலர் மாதத்தில் ஒரு நாள் ஒரு குக்கிராமத்திற்கு நேரடியாகச் சென்று முகாமிடுவர். மாவட்டத் தலைநகருக்குச் செல்லும் வாய்ப்பும் வசதியும் இல்லாத அப்பகுதி-சுற்று வட்டார ஏழை மக்கள் இந்த முகாமைப் பயன்கடுத்தத் தங்கள் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக தெரிவிக்கலாம். இந்த நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கிலும் நடத்தப்படுவதுண்டு. அவர்கள் குறைகளுக்கு அந்த முகாமிலேயே தீர்வு காண்கிற நாளாக ”மக்கள் தொடர்புத் திட்ட நாள்” அமைகிறது

Updated On: 5 Dec 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நண்பனே..எனது உயிர் நண்பனே..! பிறந்தநாள் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயதில் ஆப் செஞ்சுரி அடித்த சாதனை நாயகருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
  3. லைஃப்ஸ்டைல்
    கவிதை பாடும் அலைகளாக, தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. இந்தியா
    கோவாக்சின் பக்க விளைவுகள் குறித்த ஆய்வை கடுமையாக சாடிய ஐசிஎம்ஆர்! ...
  5. வானிலை
    தேனி, விருதுநகர், தென்காசியில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு
  6. காஞ்சிபுரம்
    அரசு விதிகளை மீறும் கனரக லாரி: இரவில் கண்காணிக்க தவறும் அலுவலர்கள்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை: ஆட்சியர் ஆலோசனை
  8. லைஃப்ஸ்டைல்
    மகிழ்ச்சி மந்திரங்கள்: வாழ்வை ரசிக்க வைக்கும் 23 எளிய சந்தோஷங்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த தூக்கத்திற்கு இரவு வணக்கம்..!
  10. போளூர்
    மாட்டு வண்டி மீது பைக் மோதல்: அண்ணாமலையார் கோயில் ஊழியர் உயிரிழப்பு