/* */

மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்

மேட்டூர் அணை திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்..

HIGHLIGHTS

மேட்டூர் அணை திறக்கும் தேதியை முதல்வர் அறிவிப்பார்
X

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர் ஆகிய 7 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளுடனான கலந்தாலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இதில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், நிகழாண்டு பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பது, தூர்வாருவது குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்டது.

இதன் பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "மேட்டூர் அணை திறப்பு குறித்து விவசாயிகள் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும்பாலான விவசாயிகள் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்க வேண்டும் எனக் கூறினர். இக்கருத்துகளை எல்லாம் முதல்வரிடம் தெரிவிப்போம். அவர் முறையாக அறிவிப்பார்.தூர்வாரும் பணி மேற்கொள்வது தொடர்பாக நிதி குழுவுக்குப் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என்றார்.


Updated On: 16 May 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?