/* */

கானும் பொங்கல்: வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்

கானும் பொங்கல் ஆன இன்று சுற்றுலா தலமான பெரிய கோயில், ராஜராஜன் மணி மண்டபம் ஆகிய இடங்கள் வெறிச்சோடி காட்சியளிக்கிறது.

HIGHLIGHTS

கானும் பொங்கல்: வெறிச்சோடிய சுற்றுலா தலங்கள்
X

வெறிச்சோடி காணப்படும் தஞ்சை பெரிய கோயில்.

கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து தமிழக அரசு ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவித்திருந்தது. பொங்கல் முடிந்து காணும் பொங்கல் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட வேண்டிய நிலையில், ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அதிக சுற்றுலா தலங்கள் இருக்கும் தஞ்சையில் பொதுவாக காணும் பொங்கல் அன்று பெரிய கோயில், மணி மண்டபம், சரஸ்வதி நூலகம், அரண்மனை என பல்வேறு பகுதிகளில் உள்ளூர் முதல் வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவார்கள். முழுஊரடங்கு என்பதால் பிரதான சாலைகள் அனைத்தும் ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு, பெரிய கோயில், மணி மண்டபம், அரண்மனை என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டு வெறிச்சோடி காட்சியளிக்கிறது. மேலும் தஞ்சையின் முக்கிய பகுதிகளில் போலீசார் சோதனை சாவடி அமைத்து வெளியே அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

Updated On: 16 Jan 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  2. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  4. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்
  5. லைஃப்ஸ்டைல்
    முடங்கிக்கிடந்தால் சிலந்திக்கூட சிறை பிடிக்கும்..!
  6. லைஃப்ஸ்டைல்
    அப்பா மகள் மேற்கோள்கள்: பாசத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகள்
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  9. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  10. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!