/* */

தஞ்சாவூர் மாவட்டத்தில் 69- வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா

அகில இந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை நடைபெறுகிறது

HIGHLIGHTS

தஞ்சாவூர் மாவட்டத்தில் 69- வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா
X

விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 69- வது மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா அரசுதலைமை கொறடா கோவி.செழியன் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பின்னர் அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவுக்கிணங்க தஞ்சாவூர் மாவட்டத்தில் 69வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதனை முன்னிட்டு கூட்டுறவு வாரவிழா கும்பகோணம் மூர்த்தி கலையரங்கத்தில் நேற்று நடைபெற்றது.

இவ்விழாவில் 1751 பயனாளிகளுக்கு ரூபாய் 4.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூபாய் 3.06 கோடி134 குழுக்களை சேர்ந்த 1608 நபர்களுக்கு கடன் உதவியும் இவ்விழாவில் வழங்கப்பட்டது. மேலும் இந்திய கூட்டுறவு வார விழாவில் கடந்த 14 ஆம் தேதி மரம் நடுதல் நிகழ்ச்சியும் ,பேச்சுப் போட்டி கட்டுரை போட்டி மற்றும் ஓவியப் போட்டியும் ,15 -ஆம் தேதி தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் சந்திரசேகரபுரம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையிலும்,16ஆம் தேதியில் மருத்துவ முகாமும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 17ஆம் தேதியில் உறுப்பினர் கல்வி திட்டம், கருத்தரங்கமும் 19 ஆம் தேதி கால்நடை சிறப்பு முகாம் மற்றும் உறுப்பினர் கல்வித் திட்டமும், 20 -ஆம் தேதி நிறைவாக விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் சந்திப்பு முகாம் நடைபெறுகிறது. இவ்விழாவின் மூலம் தொழில் மேம்பாடு மற்றும் பொது தனியார் கூட்டுறவு கூட்டாண்மையை வலுவடைகிறது. என்றார் கொறடா கோ.வி.செழியன்.

அதனைத் தொடர்ந்து 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு பாராட்டு கேடயங்களும், வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் துரைசந்திரசேகரன் (திருவையாறு), க.அன்பழகன் (கும்பகோணம்), மாநகராட்சி மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்), க. சரவணன் (கும்பகோணம்), மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சி.தமிழ் நங்கை, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் , மேலாண் இயக்குநர் வெ.பெரியசாமி, மத்திய கூட்டுறவு வங்கி இணைப் பதிவாளர் -மேலாண் இயக்குநர் ஜெ. பழனிஸ்வரி, மாவட்ட ஊராட்சி தலைவர் ஆர்.உஷாபுண்ணியமூர்த்தி, மாநகராட்சி துணை மேயர்கள் மரு.அஞ்சுகம் பூபதி (தஞ்சாவூர்), சு.ப.தமிழழகன் (கும்பகோணம்), மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் எஸ் .க.முத்து, இணை இயக்குனர் வேளாண் துறை அ.ஜஸ்டின், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 19 Nov 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  3. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  4. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  5. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  6. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  8. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  9. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  10. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்