/* */

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்

HIGHLIGHTS

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்:  ஆட்சியர்
X

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் 

அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் குடியிருப்பு பெற விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் "அனைவருக்கும் வீடு"திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத் திற்குட்பட்டவல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியில் 384(G+3) அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடியிருப்புகளை ஒதுக்கீடு பெறுவதற்கு நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்க்கும் குறைவாக இருத்தல் வேண்டும். மேலுமஇ; சொந்த நிலம் மற்றும் வீடற்ற பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்துடன் குடும்பத்தலைவர் மற்றும் தலைவி ஆகியோரின் ஆதார் அடையாள அட்டைஇஉணவுப் பங்கீடு அட்டை மற்றும் வங்கிக்கணக்குப் புத்தகம்ஆகிய ஆவணங்களின் நகல்களை இணைத்து தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அய்யனார் கோவில் திட்டப்பகுதியிலுள்ள தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தைஇ அலுவலகவேலை நாட்களில் 28.07.22 முதல் 06.08.22 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அணுகி பயன்பெறலாம்.

தகுதியான பயனாளிகளுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்டு குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளன. ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகள் வீடுகளை ஒதுக்கீடு பெற பயனாளி பங்களிப்பு தொகையாக ரூ.73 ஆயிரத்தை செலுத்த வேண்டும்;. மேலும் விவரங்களுக்கு 8667350694, 8667756031 மற்றும் 8523962235என்ற அலைபேசிஎண்களில் தொடர்புகொள்ளலாம்.எனமாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.

Updated On: 28 July 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  3. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  4. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  5. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு
  6. வால்பாறை
    வால்பாறை சாலையில் பாறைகள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
  7. வீடியோ
    Tamilaga Vettri Kazhaga-தின் மாநாட்டில் பங்கேற்ப்பேன் !#tvk #tvkvijay...
  8. லைஃப்ஸ்டைல்
    நண்பா..மனைவியை லவ் பண்ணுடா..! திருமண வாழ்த்து..!
  9. இந்தியா
    பெங்களூரு செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் அவசர...
  10. வானிலை
    வடமேற்கு இந்தியாவில் வெப்ப அலை எச்சரிக்கை, வெப்பநிலை 40 டிகிரிக்கு...