/* */

தஞ்சாவூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தஞ்சாவூரில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி
X

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூரில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாடு முழுவதும் இன்று (ஜன 25-ம் தேதி) தேசிய வாக்காளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் வாக்கு முக்கிய இடம் பிடிக்கிறது. பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும், தங்களுடைய அடிப்படை ஜனநாயக உரிமையான வாக்கு செலுத்துவதற்கு பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது, அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இருந்து முதல் வாக்காளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கொடியசைத்து தொடங்கி வைத்தார், அப்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் வாக்காளர்களுக்கான அடையாள அட்டையினை ஆட்சியர் வழங்கினார். நமது வாக்கு நமது உரிமை, ஜனநாயகத்தை மதித்து வாக்களிப்போம்,மக்களின் குரல்கள் வாக்கு போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் கையில் ஏந்திய வண்ணம் தஞ்சாவூர் ரயில் நிலைய வளாகத்தில் இருந்து பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு வளாகம் வரை நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர்.

Updated On: 25 Jan 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  3. வீடியோ
    தமிழகத்தை கலக்கிய வினோத கல்யாணம் | தமிழர்கள் ஊர் கூடி வாழ்த்து !...
  4. லைஃப்ஸ்டைல்
    தள்ளாடும் வயதுவரை ஒன்றாகும் உறவு கணவன்-மனைவி..!
  5. வீடியோ
    Amethi-யிலிருந்து Raebareli-க்கு ஏவப்பட்ட பிரம்மாஸ்தரம் | தூள்...
  6. லைஃப்ஸ்டைல்
    தொப்புள்கொடி பிணைக்கும் பாச அலைக்கற்றை, சகோதரி பாசம்..!
  7. ஈரோடு
    ஈரோட்டில் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் மழை, மக்கள் நலன் வேண்டி...
  8. லைஃப்ஸ்டைல்
    பாக்கெட் தயிர் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்ட அளவிலான தீ, தொழில் பாதுகாப்பு குழுக் கூட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    அச்சம் என்ற மடமையை விரட்டுங்க...!