/* */

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் டிராக்டர் பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிராக்டர் பேரணி
X

டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனிடம் காவல் துணை கண்காணிப்பாளர் நாக சங்கர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

தென்காசி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், கனிமவள கடத்தலை தடுக்க வேண்டும் வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள செண்பகவல்லி அணையை சீரமைக்க வேண்டும், தற்போது செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், புளியங்குடி பகுதியில் எலுமிச்சைபழம் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும், சங்கரன்கோவில் பகுதியில் பூ மார்க்கெட் அமைக்க வேண்டும், மேக்கரை அடவிநயினார் அணையில் இருந்து சிற்றாறு வரை செல்லும் அனுமன் நதி ஆற்றை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் கடையநல்லூர் பகுதியில் இருந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை டிராக்டரில் பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

முன்னதாக, இந்த டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்திருந்த சூழலில், நெல்லை சரக டிஐஜி தலைமையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட போலீசார் கடையநல்லூர் பகுதியில் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இருந்தபோதும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியன் காவல்துறையின் தடையை மீறி கடையநல்லூரில் இருந்து தென்காசி வரை பேரணியாக வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் துரை.ரவிச்சந்திரனிடம் மனு அளித்தார்.

அதனைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர், இது தொடர்பான கோரிக்கைகள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Updated On: 5 Sep 2023 7:07 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ருசியான கேரள பாசிப்பருப்பு பிரதமன் சமைச்சு பாருங்க!
  2. லைஃப்ஸ்டைல்
    தாவர உண்ணி பிராணிகளின் வயிறு பெரிதாக இருப்பது ஏன்?
  3. ஆன்மீகம்
    ஓம் என்ற மந்திர உச்சரிப்பு... பிரபஞ்ச சக்தியை நம்முள் ஈர்க்கும் ஒரு...
  4. லைஃப்ஸ்டைல்
    உடல் எடையை குறைக்கும் சுவையான கொள்ளு குழம்பு செய்வது எப்படி?
  5. வீடியோ
    🔴 LIVE : அதிமுகவால் Savukku Shankar உயிருக்கு அச்சுறுத்தல் | திருச்சி...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை அலுவலர்களுக்கு பயிற்சி
  7. குமாரபாளையம்
    குமாரபாளையம் கோவில்களில் வைகாசி பவுர்ணமி சிறப்பு வழிபாடு
  8. விளையாட்டு
    கரூரில் ஆண், பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டி துவக்கம்
  9. கரூர்
    ஜூன் 8-ம் தேதி கரூரில் கூடுகிறது தேசிய மக்கள் நீதிமன்றம்
  10. வீடியோ
    இப்படியெல்லாம் பாடம் எடுக்க முடியுமா? | உ.பி பள்ளிகல்வித்துறை அசத்தல்!...