/* */

குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

குற்றாலத்தில் குற்றாலநாதர் திருக்கோவில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

HIGHLIGHTS

குற்றாலநாதர் திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
X

கொடி மரத்திற்கு தீபாராதனை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி கோயில் திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகியது.

குற்றாலம் ஆன்மீக சுற்றுலா தலங்களில் ஒன்று. கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்கள் ஐயப்பன் சீசன் காலங்களாகும். சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவிகளில் புனித நீராடி விட்டு குற்றால நாதரை தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இங்கு பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திர சபை அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் மூலிகையை ஓவியங்களால் வரையப்பட்டுள்ளது. மேலும் சிவபுராணம் ராமாயணம் போன்ற இதிகாசங்கள் மூலிகை ஓவியங்களால் வரையப்பட்டுள்ளது. இங்கு நடைபெறும் , தேரோட்டம் மற்றும் தெப்ப உற்சவம் என அனைத்து திருவிழாக்களும் சித்திரசசபையை சுற்றியுள்ள ரத வீதிகளில் நடைபெறுவது வழக்கம்.

அருள்மிகு திருக்குற்றாலநாதா் கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் முதன்மையானதும், அருள்மிகு நடராசா் திருத்தாண்டவம் ஆடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திரசபை அமைந்துள்ள குற்றாலத்தில் நடராசப்பெருமானுக்கு நடைபெறும் சிறப்புமிக்கதுமான மாா்கழி திருவாதிரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

முன்னதாக கொடி மரத்திற்கு மாபொடி, மஞ்சள், திரவியம், இளநீர், பால், தயிர் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது.

அதனை தொடா்ந்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, இரவில் சுவாமி,அம்பாள் வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 5ம்நாளான ஜன1ம்தேதியன்று திருத்தோ் வடம்பிடித்தலும், ஜன4ம்தேதியன்று சித்திரசபையில் பச்சைசாத்தி தாண்டவ தீபாராதனை நடைபெறுகிறது.

ஜன6ம்தேதியன்று அதிகாலை 4மணிக்கு சித்திரசபையில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும், 5மணிக்கு திரிகூடமண்டபத்தில் ஆருத்ரா தரிசன தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது. விழா நாள்களில் காலை9.30 மற்றும் இரவு7மணிக்கு மேல் நடராசப்பெருமானுக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.

விழா நாள்களில் நாள்தோறும் காலை மற்றும் இரவு சுவாமி,அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெறும்.

அதேபோல் சங்கரன்கோவில் அமைந்துள்ள சங்கரனாயநாராயணர் கோமதி அம்மாள் திருக்கோவிலிலும் திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பஞ்ச சபைகளில் ஒன்றான நெல்லை அமைந்துள்ள தாமிர சபை அமைந்துள்ள கோயியிலான நெல்லையப்பர், காந்திமதி அம்மாள் கோவிலிலும் திருவாதிரை திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Updated On: 29 Dec 2022 2:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?