/* */

பாஜக நகர்மன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ

தனது வார்டு பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆய்வு செய்ய வேண்டும் என கோரியிருந்தார்

HIGHLIGHTS

பாஜக நகர்மன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் எம்எல்ஏ
X

பாஜக நகர்மன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று ஆய்வு மேற்கொண்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்.

பாஜக நகர்மன்ற உறுப்பினர் விடுத்த கோரிக்கையை ஏற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சி 23வது வார்டு நகரமன்ற உறுப்பினர் ஆக பாஜகவை சேர்ந்த சுனிதா முத்து உள்ளார். இவர் தங்கள் வார்டு பகுதியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்ய எங்கள் பகுதியை ஆய்வு செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடாரிடம் சமூக வலைதளம் மூலமும், தொலைபேசியிலும் கோரிக்கை விடுத்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு பழனி நாடார் 23வது வார்டு பகுதியில் உள்ள நியாயவிலைக்கடை மற்றும் நகராட்சி பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இப் பகுதிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் அங்கன்வாடி மையம், நியாயவிலைக் கடை விரிவாக்கம், படிப்பகம் போன்றவற்றை அமைத்து தர விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி காங்கிரஸ் கட்சியின் நகர தலைவரும், நகர் மன்ற உறுப்பினருமான காதர் மைதீன், இளைஞர் காங்கிரஸ் சந்தோஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரபிக், சுப்பிரமணியன், நகரப் பொருளாளர் ஈஸ்வரன், பாஜக நகர பொதுச் செயலாளர் ராஜ்குமார், ராமானுஜம், கார்த்திக் உட்பட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 24 April 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...