/* */

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி: மாநில பொதுச் செயலாளர் குமார்.

கடந்த 20 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் நியமனங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை கால நீட்டிப்பு இல்லாமல் உடனடியாக நிரப்ப வேண்டும்.

HIGHLIGHTS

காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு நன்றி: மாநில பொதுச் செயலாளர் குமார்.
X

 மேலகரத்தில் தமிழக அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது.

தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தமிழக அரசு எஸ்சி, எஸ்டி அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நவம்பர் மாத இதழ் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஒருங்கிணைந்த பொதுக்குழு நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல்வர் பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்பப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இந்த காலிப்பணியிடங்கள் விடுபடாமல் விரைந்து நிரப்ப வேண்டும். கடந்த 20 ஆண்டுகளாக கருணை அடிப்படையில் நியமனங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதனை கால நீட்டிப்பு இல்லாமல் உடனடியாக நிரப்ப வேண்டும்.

குரூப் டி கடை நிலை பணியிடங்களை தனியார்மயம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை கைவிட வேண்டும். அந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தில் இட ஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசும் அந்த நடைமுறையை அமுல்படுத்த வேண்டும். அரசு ஊழியர் குறையை பட்டாளம் கூட்டம் நடத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 13 Nov 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  2. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  3. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  4. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  6. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  7. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  9. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  10. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்