/* */

அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்! துரத்தி பிடிக்கும் காவல்துறையினர்!

அதிக ஒலி எழுப்பக்கூடிய புகை போக்கி கொண்டுள்ள வாகனங்களை காவல்துறையினர் விரட்டி பிடிக்கின்றனர்.

HIGHLIGHTS

அதிக ஒலி எழுப்பக்கூடிய சைலன்ஸர்! துரத்தி பிடிக்கும் காவல்துறையினர்!
X

பட விளக்கம்: தென்காசி மாவட்ட காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய புகைபோக்கிகளின் ஒரு பகுதியினை படத்தில் காணலாம்.

தென்காசியில் அதிக ஒலி எழுப்பக்கூடிய புகை போக்கி (சைலன்சர்) பொருத்திய மோட்டார் சைக்கிள்களை விரட்டி விரட்டி பிடிக்கும் காவல்துறையினர் - குவியும் பாராட்டுக்கள்.

தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை காவல்துறையினர் பிடித்து அபராதம் மற்றும் எச்சரித்து அனுப்பும் தீவிர நடைமுறைகளானது கடந்த 5 நாட்களுக்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 2,500 க்கும் மேற்பட்டோர் போக்குவரத்து விதி மீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த செயல் தென்காசி மாவட்ட மக்களிடையே நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு அடுத்தபடியாக அதிக ஒலி எழுப்பும் புகை போக்கிகளை (சைலன்ஸ்ர்) பொருத்தி சாலைகளில் வாகனங்களை இயக்கம் வாகன ஓட்டிகளை தற்போது தீவிரமாக தென்காசி போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்து வரும் நிலையில், கடந்த இரண்டு தினங்களில் 100க்கும் மேற்பட்ட அதிக ஒலி எழுப்பக்கூடிய புகைப் போக்கி (சைலன்சர்) பொருத்திய வாகனங்கள் பிடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக் கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள புகை போக்கிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் , பொது மக்களுக்கு இடையூறு ஏற்படக்கூடிய வகையில் வாகனங்களை இயக்கும் வாகன ஒட்டிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர்.

தென்காசி காவல்துறையினரின் இந்த செயல்பாடுகள் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளையும், நன்மதிப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டால் போக்குவரத்து விதி மீறல்கள் என்பது முற்றிலுமாக குறையும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Updated On: 27 Oct 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இந்த மீன்களை சாப்பிட்டா கொலஸ்ட்ரால் குறையுமாம்..!
  2. ஈரோடு
    முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி
  3. இந்தியா
    பாஜக-வின் பிளான் B என்ன?
  4. இந்தியா
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  5. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  6. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 761 கன அடியாக சரிவு..!
  9. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்