/* */

கந்து வட்டி கும்பலிடமிருந்து காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கந்து வட்டி கும்பலிடமிருந்து காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கந்து வட்டி கும்பலிடமிருந்து காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு!
X

பட விளக்கம்: கந்து வட்டி கும்பலிடமிருந்து தனது குடும்பத்தை காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த போது எந்த படம்.

தென்காசி மாவட்டம் அருணாசலம் பட்டி தெற்கு தெருவை சேர்ந்த ரவி மனைவி சங்கீதா. இவர் செக்கடி ஊர் ரவி மனைவி மாலா என்ற கந்துவட்டி கும்பலிடமிருந்து காப்பாற்ற கோரி மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனுவினை அளித்தார்.

அந்த மனுவில் நான் பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறேன் எனது கணவர் நெல்லையில் கல்லூரி மெஸ்ஸில் தங்கி இருந்து வேலை செய்கிறார். எனக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கிறார்கள்.

எதிர்மனுதாரரை கடந்த நான்கு வருடங்களாக தெரியும். எதிர்மனுதாரரிடம் கடந்த நான்கு வருடத்திற்கு முன்பு ரூபாய் பத்தாயிரம் மருத்துவ செலவுக்காக கடனாக வாங்கினேன். மேற்படி கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து தினமும் ரூபாய் 300 இரண்டு வருடங்களாக கொடுத்து வந்தேன்.

நான் கடன் தொல்லை தாங்காமல் ஒரு வருடம் திப்பனம்பட்டியில் இருந்து வந்தேன். பின்னர் எனது சொந்த ஊருக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது நான் எனது சொந்த ஊருக்கு வந்ததை தெரிந்து என்னிடம் வந்து தினமும் ரூபாய் 300 வாங்கினார்.

இந் நிலையில் எதிர் மனுதாரரிடம் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டியுடன் பணத்தை கொடுத்து விட்டதால் நான் இனி பணம் தர முடியாது என கூறினேன். எதிர் மனுதாரர் மற்றும் அவரது கணவரும் சேர்ந்து என்னிடம் நீ வாங்கிய பணம் பத்தாயிரம் வட்டி கூடுதலாக வட்டி சேர்த்து மூன்று லட்சம் தர வேண்டியது உள்ளது.

பணத்தை தரவில்லை என்றால் வீட்டை எனது பெயருக்கு மாற்றித் தருமாறு என்னிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்த நிலையில் 22 6 2023 மதியம் பீடி கடைக்கு சென்ற நேரத்தில் எனது வீட்டை பூட்டி சாவியை எதிர்மனுதார் எடுத்து விட்டார் நான் வீட்டின் கதவு அடைத்ததை பார்த்ததும் அக்கம் பக்கம் கேட்டேன். எதிர் மனுதார் அடைத்து விட்டதாக கூறினார்கள்.

எதிர்மனுதாரிடம் சென்று கேட்டதற்கு கண்டபடி என்னை திட்டி சாவியை தர முடியாது என கூறினார் கடையம் காவல் நிலையத்தில் அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது அவர்கள் சாவியை வாங்கி திறந்து கொடுத்தார்கள். மேலும் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் எந்த நேரத்திலும் எதிர்மனுதாரர் மாலா மற்றும் அவரது கணவர் ரவியை கொண்டு அசம்பா விதம் நடக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் எனது குழந்தைகள் பள்ளிக்கு செல்வதற்கும் அச்சப்படுகின்றனர். எதிர்மனுதாரர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 1 July 2023 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...