/* */

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு

Sabarimala Temple Today News -திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மகர விளக்கு பூஜைக்காக, இன்று மாலை நடை திறக்கப்படுகிறது.

HIGHLIGHTS

இன்று சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு
X

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது.

ஐயப்பன் கோவீல் மண்டல கால விசேஷ பூஜைகள், 2023ம் ஆண்டு நடைதிறப்பு விவரம் வருமாறு:

Sabarimala Temple Today News -மண்டல பூஜைக்காக, சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று (புதன்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.

கார்த்திகை முதல் தேதி நாளை (வியாழக்கிழமை) பிறக்கிறது. ஐயப்ப பக்தர்கள் நாளை முதல் மாலை அணிந்து, தங்களது விரதத்தை துவங்குகின்றனர்.

அடுத்த மாதம் (டிசம்பர்) 27-ம் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30-ம் தேதி நடை திறக்கப்படும். அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 14-ம் தேதி மகரவிளக்கு பூஜை நடைபெறும். 20-ம் தேதி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதியின் சிறப்பு தரிசனத்திற்கு பின் கோவில் நடை அடைக்கப்படும். பின்னர் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12-ம் தேதி நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைக்கு பின்னர் 17-ம் தேதி அடைக்கப்படும். பங்குனி மாத பூஜைக்காக மார்ச் 14-ம்தேதி நடை திறக்கப்பட்டு 19-ம்தேதி அடைக்கப்படும்.

அதைத்தொடர்ந்து, பங்குனி ஆராட்டு விழாவை முன்னிட்டு மார்ச் 26-ம் தேதி நடை திறக்கப்படும். 27-ம் தேதி காலை 9 மணிக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும். ஏப்ரல் 5-ம் தேதி ஆராட்டுடன் விழா நிறைவு பெறும். சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 11-ம் தேதி நடை திறக்கப்படும். 15-ம் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை நடைபெறும். அதை தொடர்ந்து 19-ம் தேதி நடை அடைக்கப்படும்.

வைகாசி மாத பூஜைக்காக மே மாதம் 14-ம்தேதி நடை திறக்கப்பட்டு, 19-ம்தேதி அடைக்கப்படும். பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு மே 29-ம் தேதி நடை திறக்கப்படும். 30-ம்தேதி பிரதிஷ்டை சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆனி மாத பூஜைக்காக ஜூன் 15-ம் தேதி நடை திறக்கப்பட்டு 20-ம் தேதி அடைக்கப்படும். ஆடி மாத பூஜைக்காக ஜூலை 16-ம்தேதி நடை திறக்கப்பட்டு 21-ம்தேதி அடைக்கப்படும். ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்டு 16-ம் தேதி நடை திறக்கப்பட்டு 21-ம் தேதி அடைக்கப்படும்.

ஒணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக ஆகஸ்டு 27-ம் தேதி நடை திறக்கப்பட்டு 31-ம் தேதி அடைக்கப்படும். புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டு 22-ம் தேதி அடைக்கப்படும். ஐப்பசி மாத பூஜைக்காக அக்டோபர் 17-ம் தேதி நடை திறக்கப்பட்டு 22 -ம் தேதி அடைக்கப்படும். சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாளையொட்டி, நவம்பர் 10 -ம்தேதி நடை திறக்கப்படும். 11-ம்தேதி சிறப்பு பூஜைகளுக்கு பின் நடை அடைக்கப்படும். பின்னர் 2024-ம் ஆண்டுக்கான மண்டல சீசன் நவம்பர் 16-ம் தேதி தொடங்கி நடைபெறும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 20 Nov 2022 5:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?