/* */

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா

பஞ்ச சபைகளில் ஒன்றான, குற்றாலநாத சுவாமி கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

HIGHLIGHTS

குற்றாலம் குற்றாலநாத சுவாமி கோவிலில் தெப்ப  உற்சவ திருவிழா
X

தென்காசி மாவட்டம் குற்றாலம் குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில் தெப்ப உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடந்தது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான குற்றாலத்தில் அமைந்துள்ளதும், தமிழகத்தின் பஞ்ச சபைகளில் ஒன்றான சித்திரசபை அமையப் பெற்றதுமான குற்றாலநாத சுவாமி திருக்கோவிலில், ஆண்டுதோறும் தை மாதம் வரும் மகம் நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவ திருவிழா நடப்பது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று மாலை நடந்தது. இதனை முன்னிட்டு சித்திர சபையில் குற்றாலநாதர், குழல்வாய்மொழி அம்பாள், இலஞ்சி முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோரை, மேளதாளங்கள் முழங்க சித்திரசபைக்கு அழைத்து வரப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

தொடர்ந்து, சித்திர சபைக்கு எதிரில் உள்ள தெப்பத்தில் சுவாமி, அம்பாள், இலஞ்சி குமரன், வள்ளி, தெய்வானை எழுந்தருளி நீராழி மண்டபத்தை 11 முறை சுற்றி வலம் வரும் வைபவம் நடந்தது. கொரோனா பரவல் காரணமாக விழாவில் குறைவான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Updated On: 21 Jan 2022 2:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!