/* */

தென்காசியில் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

தென்காசியில் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

தென்காசியில் பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
X

தென்காசி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் இலவச நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.

தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் பந்தல் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை பெருமளவு தவிர்த்து உள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பத்தாக்கம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அனல் காற்றும் வீசி வருகிறது.

கோடை வெயிலில் இருந்து காத்துக் கொள்ள பொதுமக்கள் அதிகளவு தண்ணீரை அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சிகள், தன்னார்வ மற்றும் சமூக அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தென்காசி நகரின் முக்கிய பகுதியான வேன் ஸ்டாண்டில் தென்காசி மாவட்ட பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை தென்காசி துணை காவல் கண்காணிப்பாளர் நாக சங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் குளிர்பானங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சங்க தலைவர் முரளி, நிர்வாக குழு உறுப்பினர்கள் பிரகாஷ், மைதீன், செந்தில், மாரிமுத்து, முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Updated On: 2 May 2024 7:38 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    தன்மானம் சீண்டப்படும்போது..துணிந்து நில்லுங்கள்..!
  2. தேனி
    தேனி சமதர்மபுரம் நாடார் மண்டகப்படி திருவிழா..!
  3. லைஃப்ஸ்டைல்
    கருத்து கந்தசாமிகளே..நீங்களும் இதை படிங்க...!
  4. லைஃப்ஸ்டைல்
    விநாயகருக்குப் பிடித்த விருந்துகள்: சதுர்த்தி ஸ்பெஷல் படையல் செய்வது...
  5. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    “மின்சாரம் வேறு மின்சார பல்புகள் வேறு” யார் சொன்னது..?
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றும் பெருவிழாவும் மகளிர் தின வாழ்த்துக்களும்
  9. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துக்கள்: தமிழில் நம்பிக்கையின் ஒளி
  10. வீடியோ
    🔴LIVE : சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு புகார் வீரலட்சுமி பரபரப்பு...