/* */

தென்காசியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,2A பணிகளுக்கு இலவச பயிற்சி தேர்வு

தென்காசியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,2A பணிகளுக்கு இலவச பயிற்சி தேர்வு நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

தென்காசியில் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,2A பணிகளுக்கு  இலவச பயிற்சி தேர்வு
X

தென்காசி மாவட்ட அளவிலான டி.என்.பி.எஸ்.சி குரூப் 2,2A முதன்மைத் தேர்வுக்கான இலவச பயிற்சி தேர்வுகள் நடைபெற உள்ளது.

தமிழக அரசு காலியாக உள்ள பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி. எனப்படும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் தேர்வு செய்து பணியமர்த்துகிறது. இதற்கு ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்து வருகின்றனர். அதற்கு பல்வேறு பயிற்சி நிறுவனங்கள் மற்றும் நூலகங்கள் இணைந்து பட்டதாரிகள் பயன்பெறும் வகையில் மாதிரி போட்டி தேர்வுகள் நடத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் தென்காசி வட்டார வ. உ. சி. நூலகத்தில் மாதிரி போட்டி தேர்வு நடைபெற உள்ளது.இதுகுறித்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2A முதன்மை தேர்வு வரும் 25.02.2023 அன்று நடைபெற உள்ளது. தென்காசி வ.உ.சி வட்டார நூலகம், திருநெல்வேலி சிவராஜவேல் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனமும் இணைந்து தென்காசி வ.உ.சி வட்டார நூலகத்தில் வரும் 12.02.2023 ஞாயிற்றுக்கிழமை இலவச பயிற்சி தேர்வினை நடத்த உள்ளது.

காலை 10 மணி முதல் 1 மணி வரை தமிழ் தகுதித்தேர்வு (தாள் 1) -ம் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி முடிய பொது அறிவுதேர்வு (தாள்2 ) -ம் நடைபெறும்

இந்த இலவசப் பயிற்சியில் சேர விரும்புபவர்கள் 9626252500, 9626253300, 9944317543 என்ற அலைபேசி எண்ணில் பதிவு செய்து தேர்வில் பங்கேற்று வெற்றி பெற வேண்டுகிறோம். தென்காசி மாவட்டத்தில் போட்டி தேர்வெழுத உள்ள பட்டதாரி இளைஞர்கள் மாணவர்கள் பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

Updated On: 7 Feb 2023 7:23 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு