/* */

அய்யாபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட ஆட்சியரிடம் திமுக நிர்வாகி மனு

பள்ளியின் வகுப்பறை கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மனு அளித்தார்.

HIGHLIGHTS

அய்யாபுரம் பள்ளியில் புதிய வகுப்பறை கட்ட ஆட்சியரிடம் திமுக நிர்வாகி மனு
X

அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் திய வகுப்பறை கட்டித் தர கோரி தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் அழகுசுந்தரம் ஆட்சியரிடம் மனு அளித்தார்.

பள்ளியின் வகுப்பறை கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரிடம் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் மனு அளித்தார்.

தென்காசி ஒன்றியம் அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 198 மாணவ மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள கட்டிடம் மிகவும் பழுதடைந்து நிலையில் இருந்ததால் அது இடிக்கப்பட்டது. கட்டிடத்தில் பயின்ற 82 மாணவ-மாணவிகள் தற்போது போதுமான வகுப்பறைகள் இல்லாததால் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கி பயின்று வருகின்றனர். முகூர்த்த நாட்களில் திருமண மண்டபத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மாணவ-மாணவிகள் கல்வி கற்க இடமின்றி மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

ஆகையால் மாவட்ட ஆட்சியரின் பொது நிதியிலிருந்து புதிய வகுப்பறை கட்டித் தரவேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் சிவ பத்மநாதன் பரிந்துரையின் பேரில் தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குத்துக்கல்வலை அழகுசுந்தரம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் வல்லம் செல்வம், கிளைச் செயலாளர்கள் சிவன்பாண்டியன், செல்வகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

Updated On: 28 April 2022 12:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புதுமனை புகுவிழா வாழ்த்துக்களும் சடங்குகளும்
  2. நாமக்கல்
    தண்ணீர்பந்தல் சுப்பிமணியசாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிசேக
  3. லைஃப்ஸ்டைல்
    தினமும் நெல்லிக்காய் சாப்பிடுங்க..! உங்க சரும அழகை பாருங்க..!
  4. வீடியோ
    🔴 LIVE : அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் செய்தியாளர்...
  5. தொழில்நுட்பம்
    ப்ளூடூத் மற்றும் வழிசெலுத்துதல் வசதியுடன் ஸ்டீல்பேர்ட் ஃபைட்டர்...
  6. லைஃப்ஸ்டைல்
    தைத்திருநாளும் தமிழர்களின் பாரம்பரியமும்
  7. சிங்காநல்லூர்
    அதிமுக ஆட்சியியின் குடிநீர் திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை :...
  8. லைஃப்ஸ்டைல்
    உலகெங்கும் பக்ரீத் கொண்டாட்டங்களில் உள்ள சுவாரஸ்ய வேறுபாடுகள்
  9. காஞ்சிபுரம்
    திருமண மண்டபங்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  10. கோவை மாநகர்
    தடுப்பணைகளை கட்டி தமிழகத்தை வஞ்சிக்கும் அண்டை மாநிலங்கள்: இபிஎஸ்...