/* */

குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
X

பட விளக்கம்: குஷ்பூவை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

மகளிர் உரிமைத் தொகையை இழிவாக பேசியதாக கூறி குஷ்புவை எதிர்த்து தென்காசியில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் அவரது புகைப்படத்தை செருப்பால் அடித்து காலால் மிதித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக அரசு சார்பில் மகளிர்க்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை பிச்சை காசு என விமர்சித்ததாக கூறி பாஜக பிரமுகர் மற்றும் நடிகையான குஷ்புவுக்கு எதிராக தென்காசி மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் புதிய பேருந்து நிலைய அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குஷ்பூ மற்றும் பாஜகவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மேலும் மகளிர் உரிமை தொகையை இழிவாக பேசியதாக கூறி குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்து காலால் மிதித்து கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் சங்கீதா சுதாகர், ஆலங்குளம் ஊராட்சிஒன்றிய .தலைவர் திவ்யா மணிகண்டன், கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் காவேரி சீனித்துரை, மகளிர் அணி துணை அமைப்பாளர்கள் சரஸ்வதி,சுசீலாகற்பக செல்வி, வைத்தீஸ்வரி,ஷால, மேரி நிஷா, தர்ம செல்வி, மாரியம்மாள், மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர்கள் ஷோபனா, மாரிச்செல்வி, ராஜேஸ்வரி, சமுத்திரக்கனி, முத்து லதா, சபர் நிஷா, விமலா, சாந்தி, பூங்கோதை, ராமலட்சுமி, பத்மா, கல்பனா, மகாதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 14 March 2024 1:34 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...