/* */

குற்றால அருவிகளில் நீராட விதித்த தடையை நீக்க வேண்டும், ஜெயக்குமார் எம்பி

குற்றால அருவிகளில் நீராட விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயல் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்தார்

HIGHLIGHTS

குற்றால அருவிகளில் நீராட விதித்த தடையை நீக்க வேண்டும், ஜெயக்குமார் எம்பி
X

குற்றாலத்தில் பேட்டி அளித்த எம்பி ஜெயக்குமார்.

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில செயல் தலைவரும், திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெயக்குமார் குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

தற்போது கொரோனா கால கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சுற்றுலாத்தலங்கள் திறந்துவிடப்பட்டுள்ளது. திரையரஙகுகளும் திறக்கப்பட்டு விட்டன.

இந்த நிலையில் குற்றால அருவியில் மக்கள் நீராட இன்னும் அரசு அனுமதிக்கவில்லை . அருவியல் நீராட மக்களை அனுமதிப்பது எந்த சிக்கலும் இருக்காது என்று நான் நம்புகிறேன்.

இது இப்பகுதியில் உள்ள ஏராளமான வர்த்தகர்களின் வாழ்வாதார பிரச்சனையும் கூட எனவே தமிழக முதல்வர் இது குறித்து பரிசீலித்து பொதுமக்கள் அருவியில் நீராட அனுமதி அளிக்க வேண்டும்.

தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை, வேளாண் திட்டங்களை இப்போது எதிர்க்கும் திமுக இன்னும் மூன்று நான்கு மாதங்களில் ஆதரிக்கும் என்று தெரிவித்திருக்கிறார்.

நிச்சயம் மூன்று மாதத்தில் இந்த சட்டத்தில் மக்கள் எதிர்பார்க்கும் திருத்தம் கொண்டு வரும் நிலை உருவாகும், அதற்கு தமிழக முதல்வரே காரணகர்த்தாவாக இருப்பார் எனவே அது நிச்சயம் திமுக ஆதரிக்கும் என்றார்.

Updated On: 3 Sep 2021 3:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...