/* */

செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது

தென்காசியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

HIGHLIGHTS

செஞ்சிலுவை சங்கம் சார்பில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது
X

தென்காசி செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி தென்காசி மாவட்ட கிளை, இராஜா சித்தா மருந்தகம் மதுரை மற்றும் சங்கரன்கோவில் சர்வோதயா குற்றாலம் இணைந்து நடத்திய கொரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி தென்காசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோட்டாட்சியர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார். இராஜா சித்தா மருத்துவமனை மருத்துவர் இராஜமுருகன், சங்கரன்கோவில் சர்வோதயா சங்க செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைவர் பாலகிருஷ்ணன், சர்வோதயா குற்றாலம் கிளை மேலாளர் சிவ வடிவேல் மற்றும் கிளை மேலாளர்கள் ராஜேஸ்கண்ணா, குமார், கல்யாணி சுந்தர், வடிவேல் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்,

இந்நிகழ்ச்சியில் வேட்பாளர்களுக்கும் வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கினார்கள். அதன்தொடர்சியாக புதிய பேருந்து நிலையத்தில் எதிரேயுள்ள நீதிமன்றம் மற்றும் அரசு மருத்துவமனை போன்ற இடங்களிலும் வழங்கினார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்டகிளை செயலாளர் சுப்பிரமணியன் செய்திருந்தார்.

Updated On: 28 April 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...