/* */

தையல்பயிற்சி பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா

தையல்பயிற்சி பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தையல் பயிற்சி பள்ளியில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரம் சார்பில் ஒரு வருடம் தையல் பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் விழா சுரண்டையிலுள்ள பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் சுரண்டை, வீரகேரளம்புதூர், சாம்பவர்வடகரை, திருச்சிற்றம்பலம் ஆகிய மையங்களில் இருந்து தையல் பயிற்சியில் தேர்ச்சி பெற்ற 90 மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவை அனிதா செந்தில்குமார் திருவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். விவேகானந்த கேந்திரம் மாவட்ட இணைப்பாளரும் பாரத் மாதா கல்வி நிலைய இயக்குநருமான வேல்ராஜ் வரவேற்று பேசினார்.

விழாவில் விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்ற திட்டத்தின் செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். தையல் பயிற்சி ஆசிரியைகள் கருப்பசாமி, செல்வகுமாரி, முருகேஸ்வரி, மாரியம்மாள், சுதா ஆகியோர் தையல் பயிற்சி அறிக்கை வாசித்தனர் .இந்நிகழ்ச்சியில் தமிழரசி ஐயப்பன், விவேகானந்த கேந்திர கீழப்பாவூர் ஒன்றிய அமைப்பாளர் கிருஷ்ணன், அழகர், கலைச்செல்வி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விவேகானந்த கேந்திர மாவட்ட அமைப்பாளர் கண்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தேவி முருகேசபாரதி, செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். நிகழ்ச்சியில் விவேகானந்த கேந்திர பொறுப்பாளர்கள், கேந்திர ஆசிரிய,ஆசிரியர்கள் மஞ்சு, அனுசியா, விஜி, பார்வதி,சீனு மற்றும் சமயவகுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் விவேகானந்த கேந்திரத்தின் தென்காசி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கருப்பசாமி நன்றி கூறினார்.

Updated On: 21 April 2021 6:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?