/* */

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழையால் குற்றால அருவியில் குளிக்க தடை

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த மழையால் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில்  மழையால் குற்றால அருவியில் குளிக்க தடை
X

தடை விதிக்கப்பட்ட குற்றாலம் மெயின் அருவி.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் திடீர் என பெய்த மழையால் குற்றால அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று பரவலாக பல மாவட்டங்களிலும் மழை பெய்தது. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை முதலே தென்காசி, கடையம், ஆலங்குளம், செங்கோட்டை, குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இரவு முழுவதும் சாரல் மழை பெய்தால் குற்றாலம் பிரதான அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. பாதுகாப்பு வளையத்தை தாண்டி தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தடை விதித்தனர். ஐந்தருவி, புலி அருவி, பழைய குற்றாலம் என மற்ற அருவிகளிலும் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை பெய்து வருவதால் விவசாயிகளும் பொதுமக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தனர். இந்நிலையில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணி துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் மற்றும் மழை அளவு குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (30-11-2022)

கடனா :உச்சநீர்மட்டம் : 85 அடி நீர் இருப்பு : 77.50அடிநீர் வரத்து : 12 கன அடிகன அடிவெளியேற்றம் : 125 கன அடி

ராமா நதி

உச்ச நீர்மட்டம் : 84 அடிநீர் இருப்பு : 79.50 அடிநீர்வரத்து : 49.67 கன அடிவெளியேற்றம் : 30 கன அடி

கருப்பா நதி

உச்சநீர்மட்டம்: 72 அடி நீர் இருப்பு : 62.01 அடிநீர் வரத்து : 78 கன அடிவெளியேற்றம் : 25 கன அடி

குண்டாறு

உச்சநீர்மட்டம்: 36.10 அடி நீர் இருப்பு: 36.10 அடிநீர் வரத்து: 8 கன அடிவெளியேற்றம்: 8 கன அடி

அடவிநயினார்

உச்ச நீர்மட்டம்: 132 அடி நீர் இருப்பு: 84அடிநீர் வரத்து : 69 கன அடிநீர் வெளியேற்றம்: 35 கன அடி.

Updated On: 2 Dec 2022 4:34 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  2. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  3. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  4. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  5. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்
  6. பட்டுக்கோட்டை
    இரண்டுக்குள்ளே விஷயம் இருக்கு தெரிஞ்சுக்கங்க..! அசத்தும் விவசாயி..!
  7. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  8. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  9. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!