/* */

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

HIGHLIGHTS

நெல் கொள்முதல் நிலையம் அமைக்க சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
X

தென்காசி மாவட்ட ஆட்சியரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் மனு வழங்கினர்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவருமான பழனி நாடார் ஆட்சியரை சந்தித்து மனு ஒன்று அளித்து இருந்தார்.

அந்த மனுவில், தென்காசி மாவட்டம் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கு தற்போது விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எனவே அரசு வீராணம், சுந்தரபாண்டியபுரம், சுரண்டை, சாம்பவர் வடகரை, சுற்று வட்டாரப் பகுதிகளிலும், ஆலங்குளம் மற்றும் கடையம், கீழ ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, மாயமான் குறிச்சி, சம்பன் குளம், பாப்பாக்குடி, மாதாபுரம், திப்பனம்பட்டி, சுற்று வட்டார பகுதிகளிலும், தற்காலிக நெல் கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போது தென்காசி நகர தலைவர் மாடசாமி ஜோதிடர், பொதுச் செயலாளர்கள் காஜா மைதீன், கணேசன், பொருளாளர் ஈஸ்வரன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Feb 2023 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?