/* */

உள்ளாட்சி தேர்தலில்100 சதவீத வெற்றி: மதிமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

உள்ளாட்சி தேர்தலில் மதிமுக கூடுதல் இடங்களில் போட்டிடுவதுடன், கூட்டணி வேட்பாளர்கள் 100 % வெற்றியை உறுதி செய்ய வேண்டும்.

HIGHLIGHTS

உள்ளாட்சி தேர்தலில்100 சதவீத வெற்றி: மதிமுக  செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
X

உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீத வெற்றி சுரண்டையில் நடந்த மதிமுக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி மாவட்டம், சுரண்டையில் மதிமுக மாவட்ட பொருளாளர் சுரண்டை எம். இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சுரண்டை வாழ் சிவகாசி இந்து நாடார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட ம தி.மு.க செயலாளர் இராசேந்திரன் முன்னிலை வகித்தார். சுரண்டை நகர செயலாளர் எஸ்.கே.டி. துரைமுருகன் வரவேற்றார். மாவட்ட வழக்குரைஞர்கள் அணி அ. சுப்பையா தொகுத்து வழங்கினார். மாவட்ட மருத்துவ அணி டாக்டர். வி.எஸ். சுப்பாராஜ் தொடக்க உரை நிகழ்த்தினர். வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ‌ டாக்டர். தி. சதன் திருமலைக்குமார், அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் காட்டுமன்னார்கோவில் எம்.எஸ். கந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில்m 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த தி.மு.க அரசுக்கு பாராட்டும், கொரோனா‌ தொற்றை கட்டுப்படுத்திய அரசுக்கும், வெற்றிக்கு உழைத்த மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் தொண்டர்களுக்கு நன்றி தெரிவிப்பது.

சட்டமன்ற தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற டாக்டர் தி. சதன் திருமலைக்குமார் (வாசுதேவநல்லூரி), மு. பூமிநாதன் (மதுரை தெற்கு. வழக்கறிஞர் கு. சின்னப்பா (அரியலூரி) மற்றும் டாக்டர். ஏ.ஆர். இரகுராமன் ஆகியோருக்கு பாராட்டும், நடைபெறவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மதிமுக கூடுதல் இடங்களில் போட்டிடுவதுடன், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் 100 விழுக்காடு வெற்றி பெறுவதை உறுதி செய்திடும் வகையில் தேர்தல் களப்பணியினை உடனே தொடங்குவது என்றும், தென்காசி மாவட்டம் உள்ளிட்ட தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெற கீழ்க்கண்ட இரயில்வே திட்டங்களை நிறைவேற்றித் தருமாறு மத்திய அரசையும், இரயில்வே துறையையும் இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

இருபெரும் துறைமுகங்களை இணைக்கும் வகையில் தூத்துக்குடி முதல் கொச்சி வரையான நேரடி இரயில் பாதையினை உருவாக்கிட தூத்துக்குடியில் இருந்து புதுக்கோட்டை வல்லநாடு திருநெல்வேலி - ஆலங்குளம் பாவூர்சத்திரம் வரை புதிய இரயில் பாதை அமைத்திடவும்.

திருநெல்வேலி - சேரன்மகாதேவி - அம்பை - கடையம் -பாவூர்சத்திரம் - தென்காசி - கடையநல்லூர் - சங்கரன்கோவில் வழித்தடத்தில் தாமிரபரணி விரைவு ரயில் என்ற பெயரில் தினசரி இரயிலை இயக்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட இரயில்வே திட்டங்களை நிறைவேற்றவும்,

ஆலங்குளம், சங்கரன்கோவில், மேலநீலிதநல்லூர், மானூர் வடக்கு ஆகிய ஒன்றியப் பகுதிகள் பயன்பெறும் வகையில், மேற்கு தொடர்ச்சி மலை நீராதாரத்தைப் பயன்படுத்தியோ, தாமிரபரணி உபரி நீரைப் பயன்படுத்தியோ சாத்தியமான வழிகளில் சிறப்புத் திட்டங்களின் மூலம் நீர்ப்பாசன வசதி செய்திட முன்வருமாறு தமிழக அரசின் நீர்வளத்துறையை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. செண்பகவல்லி அணை உடைப்பை சீரமைத்திடவும், மாவட்டத் தலைநகர் தென்காசிக்கு அனைத்து பகுதிகளிலிருந்தும் கூடுதல் பேருந்துகளை இயக்கிடவும்

வைகோ செயலகம் என்ற பெயரில் தென்காசி மாவட்டக் கழக அலுவலகம் அமைத்து, அதனை கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களை திறந்து வைக்க செய்வது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில், கீழப்பாவூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆறுமுகசாமி நன்றி கூறினார்.

Updated On: 31 July 2021 12:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு