/* */

வீடு தேடிச் சென்று சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

மனிதம் போற்றப்படும்.

HIGHLIGHTS

வீடு தேடிச் சென்று சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்
X

தென்காசி மாவட்டம் சுரண்டையில் வீடு தேடி சென்று அரசு அதிகாரிகள் வாரிசு சான்றிதழ் மற்றும் விதவை உதவித்தொகை பெறும் ஆணையை வழங்கினர்.

சுரண்டையைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி பெட்ரோல் இல்லாத தனது இருசக்கர வாகனத்தை உருட்டிக்கொண்டு வந்துள்ளார்.

அப்போது வீ.கே.புதூரை சேர்ந்த சிவா என்பவர் ஓட்டி வந்த வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் முத்துக்குமார் மீது மோதி சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் பலியானார்.

விபத்தில் பலியான முத்துக்குமாருக்கு மனைவி மற்றும் , மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வாரிசு சான்றிதழ் கேட்டு சுரண்டை ஆர்.ஐ.அலுவலகத்திற்கு முப்புடாதி சென்றுள்ளார். அவர்களின் வறுமை நிலையறிந்த தாசில்தார் வெங்கடேஷ் மற்றும் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் ஆகியோர் உடனடியாக அவருக்கு வாரிசு சான்றிதழ் மற்றும் விதவை உதவி தொகை பெறும் ஆணையை விசாரணை நடத்தி சான்றிதழை நேரடியாக முப்புடாதி வீட்டுக்கு சென்று வழங்கினர்.

கொரோனா ஊரடங்கால் வருவாய் இன்றி தவித்த அவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்றவற்றை கொடுத்துள்ளனர்.இதை அறிந்த ஊர்மக்கள் அரசு அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Updated On: 18 May 2021 6:04 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாஜக - காங்கிரஸ் யாருக்கு வெற்றி? தரவுகள், கள நிலவரம் சொல்வது என்ன?
  2. தமிழ்நாடு
    இப்படி ஒரு ரயில் நிலையம் கேள்விப்பட்டிருக்கீங்களா..?
  3. இந்தியா
    ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் பாஜ தலைவர் கொல்லப்பட்டார்..!
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே அங்காள பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. நாமக்கல்
    கொல்லிமலையில் 13 செல்போன் டவர்களை செயல்படுத்த பாஜ. கோரிக்கை
  10. தென்காசி
    தென்காசி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்