/* */

'நாட்டாமை' பாணியில், பஞ்., தலைவருக்கே இந்த நிலையா? 15 குடும்பங்கள் ஒதுக்கிவைப்பு

இளையான்குடி அருகே 'நாட்டாமை' பாணியில், பஞ்சாயத்து தலைவர், 15 குடும்பங்களை ஊரை விட்டு கிராமத்தினர் ஒதுக்கிவைத்தனர்.

HIGHLIGHTS

நாட்டாமை பாணியில், பஞ்., தலைவருக்கே இந்த நிலையா? 15 குடும்பங்கள் ஒதுக்கிவைப்பு
X

ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் ஊராட்சி மன்றத் தலைவர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கச்சாத்தநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் பெருமாள். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கிராமத்தில் தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 4 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை கைப்பற்றி, அங்கு அம்மா விளையாட்டு மைதானத்தை அமைத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆக்கிரமிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து கிராம ஊராட்சி தலைவர் பெருமாள் மற்றும் அவரது உறவினர்கள் என 15 குடும்பத்தினரை ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது, கச்சாத்தநல்லூர் கோவில் முளைப்பாரி திருவிழா நடைபெற்று வரும் நிலையில், தங்களிடம் வரி வசூல் செய்யப்படவில்லை எனவும், தங்களை ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள், மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியிடம் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து, கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் மதுசூதன் ரெட்டி உறுதி அளித்தார்.

நாட்டான்மை பட பாணியில் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட 15 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 July 2021 11:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  2. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  3. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  4. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  5. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  6. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  7. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  9. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  10. லைஃப்ஸ்டைல்
    யாரையும் நம்பாதே: சிறந்த 50 தமிழ் மேற்கோள்கள்!