/* */

சிவகங்கையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, நடிகை விந்தியா பிரசாரம்

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும், ராகுல் காந்தியின் முதுகில் குத்துவதும் ஒன்றுதான் என காளையார்கோவில் தேரடித்திடலில் விந்தியா பேச்சு

HIGHLIGHTS

சிவகங்கையில், அதிமுக வேட்பாளரை ஆதரித்து, நடிகை விந்தியா பிரசாரம்
X

அதிமுக வேட்பாளரை ஆதரித்து, சிவகங்கையில், நடிகை விந்தியா பிரசாரம்.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடக்கிறது. இத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் களைகட்டியுள்ளது.

இந்நிலையில் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக சார்பில் சேவியர் தாஸ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் காளையார் கோவில் தேரடி திடல் பகுதியில் சேவியர் தாசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் நிகழ்வில் கலந்து நடிகை விந்தியா பேசுகையில்:

கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும், ராகுல் காந்திக்கு முதுகில் குத்துவதும் ஒன்றுதான். கடந்த ஐந்து ஆண்டுகளில் கார்த்தி சிதம்பரம் சிவகங்கை தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. கார்த்திக் சிதம்பரத்திற்கு வாக்களிப்பதும் பாஜகவுக்கு வாக்களிப்பது ஒன்றுதான் என விமர்சனம் செய்தார்.

கார்த்திக் சிதம்பரம் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் சீட்டு வாங்கியதாகவும் கார்த்திக் சிதம்பரம் சிவகங்கை தொகுதியில் வெற்றி பெற்றால் பாஜகவில் சேர்ந்து விடுவார் என, காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும் எனவும் விமர்சித்தார்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஸ்டீபன் அருள்ராஜ், சிவாஜி, பழனிச்சாமி, கருணாகரன், கோபி, மற்றும் இளைஞர் இளம் பெண் பாசறை துணைச் செயலாளர்கள் ஏகே பிரபு, சதீஷ், மோசஸ் , மற்றும் வழக்கறிஞர் பிரிவு துணைச் செயலாளர் நவநீதன் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.

Updated On: 1 April 2024 7:10 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...