/* */

ராணிபேட்டை அருகே கிராம மக்கள் குடிதண்ணீர், சாலை வசதி கோரி சாலை மறியல்

ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கோடியூர் கிராம மக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

HIGHLIGHTS

ராணிபேட்டை அருகே கிராம மக்கள் குடிதண்ணீர், சாலை வசதி கோரி  சாலை மறியல்
X

சிப்காட் அடுத்த கோடியூர் கிராம மக்கள் குடிநீர் மற்றும் சாலை வசதி கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுக்கா, சிப்காட் அடுத்த கோடியூர் கிராமம் உள்ளது. இந்த கிராமம், ராணிப்பேட்டை மாவட்டத்தின் எல்லையில் அமைந்துள்ளது.

கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடைக்கோடி கிராமம் என்பதால்,கிராமத்தை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் எந்த ஒரு நலதிட்டமும் வழங்காமல் புறக்கணிப்பதாக ஊர்மக்கள் கூறுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை எனவும் சாலைகள் முற்றிலுமாக பழுதடைந்த நிலையில் இரவில் விளக்குகளின்றி பாதுகாப்பற்ற சூழலில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து, ஊராட்சி செயலாளர் சோழனிடம் பலமுறை முறையிட்டும் அவர் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், அந்த ஊருக்கு தண்ணீர் பம்ப் செய்யும் மின் மோட்டாரை ஊராட்சி செயலாளர் விற்றுவிட்டதால் ஊருக்கு முறையான குடிநீர் கிடைக்கவில்லை என ஊர்மக்கள் குற்றம்சாட்டினை வைக்கின்றனர்.

இந்நிலையில், அப்பகுதியில் கடந்த 10 நாட்களாக தொடர்ச்சியாக குடிநீர் வராததால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலி குடங்களுடன் பொன்னையிலிருந்து ராணிப்பேட்டை செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாலாஜாப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் சம்பவ இடத்திற்கு வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில்,உடன்பாடு ஏற்படவே சாலை மறியலை கைவிட்டனர்

மேலும் ,அந்தப் பகுதியில் சாலை வசதி கழிவுநீர் கால்வாய் வசதி முறையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சாலை மறியல் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது...

Updated On: 26 July 2021 10:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?