/* */

மனித உயிர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியவர்களுக்கு மத்திய அரசு விருது

ஆபத்திலிருந்து உயிர்களை காப்பாற்றியவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் அறிவிப்பு

HIGHLIGHTS

மனித உயிர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியவர்களுக்கு மத்திய அரசு  விருது
X

மத்திய உள்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆபத்தில் சிக்கிய மனித உயிர்களை துணிவுடன் சாதுர்யமாக காப்பாற்றியவர்களை கௌரவிக்கும் விதமாக "சர்வோத்தம் ஜீவன் ரக்ஷாபதக், மற்றும் உத்தம் ஜீவன் ரக்ஷாபதக் ஆகிய விருதுகளை வழங்கி வருகிறது .

அதன் அடிப்படையில் , தீவிபத்தில் சிக்கியவர்களை,மின்சாரம் தாக்கியவர்களை காப்பாற்றியவர்கள் மற்றும் நீரில் மூழ்கி உயிருக்குப் போராடியவர்களை மீட்டவரகள் மற்றும் விலங்குகளிடத்தில் சிக்கியவர்கள் உள்ளிட்ட பேராபத்தில் சிக்கிய உயிருக்கு போராடியவர்களை திறனோடு காப்பாற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது .

மேலும், ஆயுதப்படையைச்சேர்ந்தவர்கள்,காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் தங்களது பணிநேரத்தில் இல்லாத போது மேற்படி விபத்துகளிலிருந்து காப்பாற்றியவர்களும் விருதுகள் பெற தகுதியானவர்களாவர். விருதுகளைப்பெற விரும்புவோர் 1-102019க்குப்பிறகு தற்போது வரை ஏற்படும்விபத்துகளில் காப்பாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம் அதற்கு முன்பு நடந்தவைகள் கருத்தில் கொள்ளப்படாது என கூறப்பட்டுள்ளது .

எனவே, இராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மேற்படி விருதுகளை பெற தகுதியானவர்கள் தங்களது சேவைகுறித்து நாளிதழ்களில் செய்தியாக வந்ததை சான்றுகளோடு இணைத்து வரும்10-8-2021க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் ,விபரங்களை அறிய மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவரை நேரில் தொடர்கொள்ளலாம் என்று இவ்வாறு இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிவித்துள்ளார்

Updated On: 27 July 2021 9:02 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!