/* */

இராணிப்பேட்டையில் சிறுபான்மையினர் தினம்: கலெக்டர் பங்கேற்பு

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமையில் சிறுபான்மையினர் தின கூட்டம் நடைபெற்றது

HIGHLIGHTS

இராணிப்பேட்டையில் சிறுபான்மையினர் தினம்: கலெக்டர் பங்கேற்பு
X

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் பேசும் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் 

ராணிப்பேட்டை மாவட்டநிர்வாகம் சார்பில் சிறுபான்மையினர் தினம் சிறப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது:

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா என்பது மத்திய மாநில அரசுகள் சிறுபான்மையினர் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் கல்வி உதவிகளையும் செயல்படுத்தி வருகின்றனர்.

பல மதத்தினர் அவரவர் ஏற்றுக்கொண்ட கடவுள்களை வணங்கி வருகின்றனர் ஆனால் அனைத்து மதமும் தெரிவிக்கும் ஒரே கருத்து அனைவரிடமும் அன்பை காட்ட வேண்டும் என்கின்ற ஒரே கருத்தாகும். அனைத்து மதங்களும் அன்பை போதிக்கின்றது. வழிபாடுகள் சடங்குகளால் காலப்போக்கில் மதங்கள் தனித்தனியாக மாறி விட்டதே தவிர, அனைத்து மதங்களும் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுவதே ஒரே கருத்தாக குறிக்கோளாக கொண்டு உள்ளது.என்றார்.

பல்வேறு மதத்தினர் சிறுபான்மையினர் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால் அவர்களின் முன்னேற்றத்திற்காக தமிழக அரசு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு மதத்தினர் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். சிறுபான்மை இன மக்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு அரசு வழங்கும் பல்வேறு திட்டங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும். இந்தக் கூட்டத்தில் வருகை தந்துள்ள சிறுபான்மையினர் மதத்தினர் அரசின் திட்டங்கள் குறித்து தங்கள் மக்களுக்கு அனைவருக்கும் தெரிந்தவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக திட்டங்கள் குறித்து விளக்க கையேடுகளை வழங்கிட வேண்டும்.

மேலும் வறிய நிலையில் உள்ள சிறுபான்மையின மக்கள் அவர்களின் தேவையை அறிந்து அவர்களின் வறுமையைப் போக்க அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை அவர்களுக்கு தெரியப்படுத்தி அவர்களும் பயன்படும் வகையில் சிறப்பாக இத்திட்டங்களை கொண்டு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் பேசினார்.

நிகழ்ச்சியில்,15 உலமாக்களுக்கு அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் அவர்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை அனைத்து சிறுபான்மை மத தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுரேஷ் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சேகர் மற்றும் வர்த்தமானன் ஜெய்ன் சங்க தலைவர் சரவணன் பௌத்த அறநெறி யாளர்கள் சங்கம் ராஜேந்திரன் csi தூய மரியாள் ஆலயம், பக்த குமார் செயலாளர் கிறிஸ்தவ பெண்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Updated On: 18 Dec 2021 2:44 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...