/* */

கடன் பிரச்சினையில் ஓட்டல் அதிபர் ரயில் முன் விழுந்து தற்கொலை

வாலாஜாஅடுத்த வி.சி.மோட்டுரில் சீட்டுகட்டி பணம் ஏமாற்றியதால் கடன் பிரச்சினையில் சிக்கிய ஓட்டல் அதிபர் தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

கடன் பிரச்சினையில் ஓட்டல் அதிபர் ரயில் முன் விழுந்து தற்கொலை
X

இராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி மோட்டூரைச் சேர்ந்த விஜயன், என்பவர் அதேப்பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார். மேலும் அவர், இராணிப்பேட்டையில் உள்ள தனியார் சீட்டு கம்பெனி ஒன்றில் 40லட்சத்திற்கு சீட்டு கட்டி வந்ததாகவும், முடிவடைந்த நிலையில் கட்டியப் பணத்தை நிறுவனம் விஜயனுக்கு திரும்பத் தராமல் ஏமாற்றியதாக்க் கூறப்படுகிறது.

இது குறித்து,அவர் பலமுறை ஊர் முக்கிய பிரமுகருடன் நேரில் சென்று கேட்டும் அலைக்கழித்து வந்துள்ளனர். மேலும் ,விஜயன் சீட்டுப்பணத்தை நம்பி பலருடன் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதனால்,நெருக்கடிக்கு ஆளாகிய விஜயன் நம்பிய பணம் வராமல் ஏமாற்றப்பட்டதாலும் கடன் கொடுத்தவர்களின் தொல்லையாலும் அதிக மனஉளைச்சலில் இருந்தார்.

இந்நிலையில் வழக்கம்போல விஜயன் ஓட்டலில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, கடன்காரர்கள் கடைக்கு வந்து பணத்தைக் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.இதனால் ,விரக்தியடைந்த விஜயன் வாலாஜா அருகே கொளத்தேரி ரயில் பாதைக்குச் சென்று அவ்வழியாகச் சென்ற ரயிலின் கீழ் தலைவைத்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த கோரச்சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.



Updated On: 26 Oct 2021 6:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?