/* */

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2ஆம்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு .

இராணிப்பேட்டை மாவட்டத்தில் இரண்டாம் கட்டத்தேர்தல் நடக்கும் 4 ஒன்றியங்களில் பிரச்சாரம் நிறைவடைந்தது

HIGHLIGHTS

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2ஆம்கட்ட தேர்தல் பிரச்சாரம் நிறைவு .
X

இராணிப்பேட்டை மாவட்ட வரைபடம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் முதற்கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் திமிரி, ஆற்காடு மற்றும் வாலாஜா ஆகிய ஒன்றியங்களில் நடந்து முடிந்துள்ளது.

அதனைத்தொடர்ந்து 2ஆம் கட்டமாக அரக்கோணம், நெமிலி, சோளிங்கர், காவேரிப்பாக்கம் ஆகிய 4 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 1469 பதவிகளில் , போட்டியின்றி தேர்வான 308 பதவிகள் நீங்கலாக மீதமுள்ள 1161 பதவிகளுக்கு, 757 வாக்குச்சாவடி மையங்களில் 9ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது.

அரக்கோணம் பஞ். யூனியனில் 2 மாவட்ட கவுன்சிர்கள், 23 ஒன்றிய கவுன்சிலர்கள் 42 ஊராட்சி தலைவர்கள் மற்றும் 351 ஊராட்சிவார்டு உறுப்பினர் ஆகிய 418 பதவிகளில் 2 ஊராட்சி தலைவர்கள் மற்றுமம் 65 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மீதமுள்ள 286 பதவிகளுக்கு 232 மையங்களில் நடக்க உள்ளது.

சோளிங்கரில் உள்ள 2 மாவட்டகவுன்சிலர்கள், 19 ஒன்றிய கவுன்சிலர்கள், 40 ஊராட்சி தலைவர்கள், மற்றும் 318 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என 379 பதவிகளில் ஊராட்சி தலைவர்கள், 101 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டநிலையில் 276 பதவிகளுக்கு 196 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடக்க இருக்கிறது

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 1 மாவட்ட கவுன்சிலர்,10 ஒன்றிய கவுன்சிலர்கள், 29 ஊராட்சி தலைவர்கள், 213 ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 253 பதவிகளில் 1 ஊராட்சி தலைவர் மற்றும் 55 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் களுக்கு போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டு 197பதவிகளுக்கு 120 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல். நடக்கிறது.

நெமிலி ஒன்றியத்திலுள்ள 2 மாவட்ட கவுன்சிலர்கள், 19 ஒன்றிய கவுன்சிலர்கள், 47 ஊராட்சி தலைவர்கள், 351 ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் ஊராட்சி தலைவர்கள்பதவிக்கு7பேரும்,72 ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு மொத்தமுள்ள 351 பதவிகளில் 79 நீங்கலாக 340 பதவிகளுக்கு 209 வாக்குச்சாவடிகளில் நடக்கிறது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 7 ஒன்றியங்களில் முதற்கட்ட தேர்தல் நடந்த ஒன்றியங்கள் போக, மீதமுள்ள தேர்தலில் அதிமுக ,திமுக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர்கள்மற்றும் சுயேட்சைகள் உட்பட 3 ஆயிரத்து 378 பேர் போட்டியிடுகின்றனர் .

வேட்பாளர்களை ஆதரித்து திமுக தரப்பில் பாரளுமன்ற உறுப்பினர், அமைச்சர்களும் தேர்தல் ,பிரச்சாரம் செய்து வந்தனர்.

அதேபோல, அதிமுகவில் முன்னாள் முதல்வர், துணை முதல்வர் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர் .

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகளின் படி பிரச்சாரங்கள் அனைத்தும் மாலை 5மணியுடன் நிறைவடைந்தது.

Updated On: 7 Oct 2021 4:35 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...