/* */

திருமண மண்டபங்களில் கொரோனா விதிகள் பின்பற்ற வேண்டும்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

திருமண மண்டபங்களில் கொரோனா விதிகள் பின்பற்ற வேண்டும்; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
X

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரித்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டுமென மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரித்துள்ளார்.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்களில் தற்போது தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி அதிகம் கூட்டத்தை தவிர்த்திட முன்கூட்டியே தெரிவித்திட வேண்டும். மேலும், எச்சரிக்கை செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நிகழ்ச்சி நடத்துவதற்கு வாடகைக்கு விடவேண்டும்.

தற்போது திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் கொரொனா விதிகளை பின்பற்றி நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் மாவட்டத்திலுள்ள பல திருமண மண்டபங்களில்முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியின்றி கொரொனா விதிகளை பின்பற்றாமல் நோய்த் தொற்று பரவும் விதத்தில் நிகழ்ச்சிகள் நடந்துவருவதாக தெரியவருகிறது.

இச்செயல், தற்போது குறைந்துவரும் நோய்தொற்றை மீண்டும் அதிகரிக்கச்செய்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. இவற்றிற்கு மண்டப உரிமையளர்களே முழு பொறுப்பாவார்கள். எனவே திருமண மண்டபங்களில்,கொரோனா விதி முறைகளை பின்பற்றாமல் நிகழ்ச்சிகள் நடத்தினால்,மண்டப உரிமையாளர்கள்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், மண்டபங்களுக்கு சீல்வைக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் எச்சரித்துள்ளார்.

Updated On: 26 Aug 2021 12:53 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?