/* */

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு

கலவரத்தில் பொதுமக்களின் உயிர்உடமைகளை பாதுகாத்தவர்கள் , கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க இராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு .

HIGHLIGHTS

கபீர் புரஸ்கார் விருதுக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அறிவிப்பு
X

ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கரபாண்டியன்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று முதலமைச்சரால் சமூக நல்லிணக்கத்திற்காக வழங்கப்பட்டு வரும் கபீர் புரஸ்கார் விருது பெற தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க இராணிப்பேட்டை கலெக்டர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

விண்ணப்பதார்ர்கள் சமூதாய நலனுக்காக தன்னார்முடன் தங்கள் உயிரைப் பணயம் வைத்து மன தைரியத்துடன் செயல்பட்டு தொண்டாற்றிட வேண்டும் எளிதில் கண்டறியக்கூடியதும் அளிவிடக் கூடியதாகவும இருக்கவேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள்சாதி,மத இனக்கலவரங்களின் போது மத சார்பில்லாமல் தகுந்த முறையில் பிற மதத்தினரது உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாத்திருக்க வேண்டும்.

ஏற்கனவே இவ்விருது பெற்றவர்கள் விணப்பிக்க இயலாது.. உள்ளூர் மக்களிடம் பெற்றுள்ள செல்வாக்குகள் குறித்தும் பரிசீலனையில் எடுத்துக் கொள்ளப்படும்.

.2021ம். ஆண்டில் மேற்கொண்ட சேவைமட்டுமே விருதுக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.

விருதானது, கிரேடுகள்1,2,3 என்ற அடிப்படையில் ரூ 20 ஆயிரம்,10 ஆயிரம் மற்றும் ரூ.5000 ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுப்பத்திரம் முதலியன வழங்கப்படுகிறது.

இராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்துவரும் தகுதியான குடிமக்களில் ஆண்,பெண்,காவல்துறை,தீயணைப்புப்படையினர் மற்றும் தகுதியுள்ள அரசுப் பணியாளர்களும் வயது வரம்பின்றி விருதுப்பெற விண்ணப்பிக்கலாம்.

எனவே தகுதியானவர்கள் விண்ணப்பம் படிவம் பெறவும் மேலும் விபரங்களைப் பெறவும் www .in.gov.in/announcements/ என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் காவல் துறையின் மூலம் எவ்வித ஆட்சேபணையும் இல்லை என்ற சான்றிதழைப் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வேலூர் மாவட்ட விளையாட்டு் இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் யாவும் இம்மாதம் 7ம் தேதி மாலை5 மணிக்குள் வந்து சேரவேண்டும்.

விண்ணப்பங்கள் ஆய்வுசெய்யப்பட.டு மாவட்ட ஆட்சியரின. பரிந்துரையின் பேரில் தமிழக விளையாட்டு மேம்பாட்டுஆணையத்தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும்

மேலும் விபரங்கட்கு மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் வேலூர் .தொலைபேசி எண் 7401703483என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.

Updated On: 5 Dec 2021 7:20 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...