/* */

தீபாவளி பட்டாசுக்கடைக்கு உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில், தீபாவளி பட்டாசு கடைக்கு உரிமம் பெற விண்ணப்பங்கள் அளிக்கலாம் என்று, கலெக்டர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தீபாவளி பட்டாசுக்கடைக்கு உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X

கோப்பு படம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில், தீபாவளியை முன்னிட்டு, பட்டாசுக் கடைகள் வைக்க உரிமம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையின் போது, வெடிபொருள் விதிகள் 2005ன்கீழ் தற்காலிகப்பட்டாசுக்கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பங்கள், வரும் அக்டோபர் 10ந்தேதிக்குள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பிக்க விரும்புவோர், கடை அமையும் இடத்தின் சாலை வசதிகள், இருவழிகள் கொண்ட, கடை உட்புற, வெளிப்புற வரைப்படங்கள் மற்றும் சொந்தக்கடையின் ஆவனங்கள், வாடகை எனில் ஒப்பந்தப்பத்திரம், உரிமம் பெறுபவரின் அடையாள அட்டைகளான குடும்ப அட்டை,ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ₹500- அரசுக்கணக்கில் செலுத்திய செலானின் அசல், கடைவரி ரசீது மற்றும் பாஸ்போர்ட் புகைப்படம்2 ஆகியவற்றை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

விண்ணப்பங்களை, துறை மூலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவை நிராகரக்கப்பட்டது, அல்லது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகிய விவரங்களை ஆன்லைனிலேயே அறிந்து உரிமத்தை இ-சேவை மையத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசி நாளான வரும் 10 ந்தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. அதேபோல நிரந்தர உரிமம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றிற்கு, இவ்வழிமுறைப் பொருந்தாது என்று, இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Updated On: 30 Sep 2021 11:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?