/* */

உடைந்த பேருந்து படிக்கட்டு, புகார் அளித்த பயணி: கலெக்டர் நடவடிக்கை

இராணிப்பேட்டையில் படிக்கட்டு உடைந்த நிலையில் பேருந்து இயக்கியதை, வாட்ஸப்பில் அனுப்பிய புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த கலெக்டர்

HIGHLIGHTS

உடைந்த பேருந்து படிக்கட்டு,  புகார் அளித்த பயணி: கலெக்டர் நடவடிக்கை
X

உடைந்த நிலையில் இருக்கும் பேருந்து படிக்கட்டு

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டிலிருந்து இராணிப்பேட்டை முத்துக்கடைவழியாகச் சென்ற தனியார் பேருந்தில் படிகட்டு உடைந்த நிலையில் இயங்கிவருவதாக பயணி ஒருவர் இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியனுக்கு புகாரினை வாட்ஸப் மூலம்தெரிவித்தார்.

வாட்ஸப்மூலம் வந்த புகாரின்பேரில், பேருந்தைக்கண்டு நடவடிக்கை எடுக்க மண்டல போக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, பேருந்தைக் கண்டறிந்து போக்குவரத்து அலுவலர் ஆய்வுசெய்து பேருந்தின் தகுதிச்சான்றை ரத்து செய்து இயக்கத் தடைவிதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கை குறித்து ஆட்சியர் பாஸ்கரப்பாண்டியன் உடனே புகார் அளித்த நபருக்குத் தகவல் தெரிவித்தார் . மேலும் பயணியும் ஆட்சியருக்கு நன்றி தெரிவித்தார் .

மேலும் இது தொடர்பாக மாவட்டத்தில்இயங்கும் அனைத்து தனியார்பேருந்துகளின் படிகட்டுகள் மற்றும் உள் தரைதளம் ஆகியவற்றை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் இராணிப்பேட்டை மண்டலபோக்குவரத்து அலுவலருக்கு உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 25 Dec 2021 3:30 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...