/* */

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப்படுவதால் மத்தியஅரசு இழப்பீடு வழங்க மீனவர்கள் கோரிக்கை

HIGHLIGHTS

தமிழக  மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை  அரசு ஏலம் விடுவதற்கு  எதிர்ப்பு
X

 ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்

தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் எதிர்ப்பு.மத்திய அரசு இழப்பீடு வழங்க மீனவர்கள் கோரிக்கை.

தமிழக கடற்கரை மாவட்டங்களான நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றம் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை அரசால் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு மீன்பிடி தடைச்சட்டத்தின் கீழ் 2014 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு அரசுடைமையாக்கப்பட்ட 125 மீன்பிடி படகுகள் மற்றும் 17 நாட்டுபடகு காரை நகர், காங்கேசன்துறை, மயிலட்டி, தலைமன்னார் உள்ளிட்ட கடற்படை முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசு இலங்கை வசமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை வரும் பிப்ரவர் மாதம் 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை அந்தந்த கடற்படை முகாம்களில் படகுகளை ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்திருந்ததது. இலங்கை அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர் சங்கம் சார்பில் இன்று ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே மீனவர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.தமிழக மீனவர்களின் 105 படகுகள் இலங்கையில் ஏலம் விடப்படுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.இலங்கையில் உள்ள படகுகளுக்கு மாநில அரசு நிவாரணம் வழங்குவது போல் மத்திய அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வரும் 2ந்தேதி இந்திய அரசு ஆவணங்களை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைத்து வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

Updated On: 24 Jan 2022 10:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  2. காஞ்சிபுரம்
    பள்ளி பேருந்தில் பயணிப்போர் நம் குழந்தைகள் என எண்ண வேண்டும்..!
  3. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  4. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  5. ஈரோடு
    அந்தியூர் அருகே 2 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
  6. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  8. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  9. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  10. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!