/* */

பாம்பன் ரயில் பாலத்தை காலாவதியாக்க முயற்சி.. மீனவர்கள் அமைப்பு கண்டனம்...

ராமேஸ்வரத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வந்த பாம்பன் பாலத்தை பழுது என்ற பெயரில் காலாவதி ஆக்க முயற்சிக்கும் ரயில்வே துறைக்கு கண்டனம் எழுந்துள்ளது.

HIGHLIGHTS

பாம்பன் ரயில் பாலத்தை காலாவதியாக்க முயற்சி.. மீனவர்கள் அமைப்பு கண்டனம்...
X

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி.

தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேனாதிபதி சின்னத்தம்பி வெளியிட்ட அறிக்கை விவரம் வருமாறு:

ராமேஸ்வரம் தீவில் உள்ள ஒரு லட்சம் பேருக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் பாம்பன் ரயில் பாலம் கடந்த 109 ஆண்டுகளாக மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களும் மற்றும் போக்குவரத்திற்கும் முக்கிய ஆதாரமாக விளங்கியது. பாம்பன் ரயில் பாலம் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி சத்தம் வந்ததாக கூறி பாம்பன் பாலத்தில் பழுது என ரயில் போக்குவரத்தை நிறுத்தி விட்டார்கள். இது ரயில் பாலத்தை காலாவதியாக்கும் முயற்சி ஆகும்.

கடந்த இரண்டு மாதங்களாக மேலாக தொடர்ச்சியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகளும், தீவில் வாழும் மக்களும் மிகவும் சிரமப்படுகிறார்கள். புதிய பாம்பன் ரயில் பாலம் 2019 வருடம் தொடங்கப்பட்டது. ஆனால், நான்கு ஆண்டுகள் ஆகியும் பாலம் முடிக்கப்படாமல் உள்ளது. தொடர்ச்சியாக நடந்த முறைகேடுகளால் 550 கோடி ரூபாய்க்கு மேலாக செலவழித்தும் இன்னும் புதிய பாலம் முடிக்கப்படவில்லை .

ராமேஸ்வரம் தீவின் முக்கிய போக்குவரத்து தளமாக இருப்பது ரயில் போக்குவரத்து ஆகும். ராமேஸ்வரம் மக்களின் அத்தியாவசியமான பயன்பாட்டிற்கும் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் முக்கிய போக்குவரத்து ஆதாரமாக ரயில் இருந்து வந்தது. இந்த நிலையில் ரயில் போக்குவரத்து தடைபட்டிருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

தற்போது செயல்பாட்டில் இருப்பது பாம்பன் பேருந்து பாலம் மட்டும் தான். ஆனால் அதுவும் மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளது. அடிக்கடி பழுது ஏற்படுவதால் அதன் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் பேருந்து பாலமும் பழுது ஏற்பட்டால் தீவுப் பகுதி துண்டிக்கப்படும். தீவில் இருந்து எந்த போக்குவரத்தும் நடப்பதற்கு இல்லாமல் போகும் நிலை ஏற்படும். இதனால் தீவு பகுதிகளுக்கு வாழும் மக்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

எனவே பாம்பன் புதிய ரயில் பாலம் கட்டுமானத்தை விரைவு படுத்தவேண்டும். அதேசமயம் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டி முடிக்கும் வரை பழைய பாம்பன் ரயில் பாலத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என ரயில்வே துறைக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் தீவு மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 7 Feb 2023 5:19 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு