/* */

ஜன.1 -ல் திட்டமிட்டபடி ரயில் மறியல் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு

இராமேஸ்வரத்தில் திட்டமிட்டபடி ஜனவரி 1-ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படுமென மீனவர்கள் அறிவித்துள்ளனர்

HIGHLIGHTS

ஜன.1 -ல் திட்டமிட்டபடி  ரயில் மறியல் போராட்டம்: மீனவர்கள் அறிவிப்பு
X

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மீனவர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம்

இராமேஸ்வரம் மீனவர்கள் தில்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதால் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் துறைமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை 69 மீனவர்களையும் 10 விசைப்பலகையும் கைது செய்த நடவடிக்கையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் டிசம்பர் 19 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்து டிசம்பர் 22ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் திட்டமிட்டபடி, ஜனவரி 1ம் தேதி தங்கச்சிமடம் வலசை பகுதியில் மாலை 4 மணி அளவில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் எனவும், அதற்கு முன்பு தில்லியில் வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திப்பதற்கு தமிழக அரசு தற்போது மீனவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதற்கிடையில் இன்னும் இரு தினங்களில் ராமேஸ்வரம் மீனவர்கள் தில்லி சென்று வெளியுறவுத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதால், அந்த மீனவர்களை சந்திப்பு நடக்கும் வரை ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என மீனவ சங்க கூட்டத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

Updated On: 26 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  2. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  3. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  4. போளூர்
    சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் மத்திய, மாநில அதிகாரிகள்...
  5. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  6. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  7. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  9. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!
  10. காஞ்சிபுரம்
    கோ-ஆப்டெக்ஸ் ஊழியர் சங்க பொது பேரவை விழாவில் 15 தீர்மானங்கள்..!