/* */

பாம்பன் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்ததும் சென்சார் மீண்டும் பழுது.

பாம்பன் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்ததும் சென்சார் மீண்டும் பழுதானதால் ரயில் பயணிகள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகினர்.

HIGHLIGHTS

பாம்பன் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்ததும் சென்சார் மீண்டும் பழுது.
X

ராமேஸ்வரம் பாம்பன் துாக்குபாலத்தில் ரயிலை நிறுத்தி வைத்து சென்சார் பழுது நீக்கும் சோதனை நடைபெற்றது.

பாம்பன் தூக்கு பாலத்தில் சோதனை ஓட்டம் முடிந்ததும் சென்சார் மீண்டும் பழுதானதால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் தீவு பகுதியையும், மண்டபம் நிலப்பரப்பையும் இணைப்பதற்கு முக்கிய பங்காற்றி வருவது பாம்பன் பாலங்கள் தான். இந்த நிலையில் பாம்பன் தூக்கு பாலத்தில் கடந்த 27ம் தேதி ஏற்பட்ட சென்சார் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில்கள் இயக்கப்படாமல், அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பாம்பன் தூக்கு பாலத்தில் ஏற்பட்டுள்ள சென்சார் தொழில்நுட்ப கோளாறுகளை நேற்று ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் சரி செய்தனர். இதைதொடர்ந்து மாலை பாம்பன் ரயில் பாலத்தில் பயணிகள் இல்லாத ரயிலை பாம்பன் தூக்கு பாலத்தில் சோதனை செய்தனர். மேலும் பாம்பன் ரயில் பாலத்தில் ரயிலை நிறுத்தி வைத்தும் சோதனை செய்தனர். மீண்டும் சென்சர் பிரச்சனை ஏற்படுகிறதா, அல்லது பாம்பன் தூக்கு பாலத்தில் ஏதேனும் அதிர்வுகள் உள்ளதா என்று சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சார் பிரச்சனை மற்றும் அதிர்வு இல்லை என்றதால், மீண்டும் ராமேஸ்வரம் வரை ரயில் போக்குவரத்து துவங்கியது. இந்நிலையில் இன்று மீண்டும் சென்சார் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய சென்னை ஐஐடி ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாம்பன் தூக்கு பாலத்தில் சென்சார் கோளாறு ஏற்படுவதால் ரயில் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Updated On: 1 July 2021 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?