/* */

பாம்பன் தெற்குவாடியில் நள்ளிரவில் தீவிபத்து: வீட்டிற்குள் உறங்கிய மூதாட்டி சாவு

பாம்பன் தெற்குவாடி பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் வீட்டிற்குள் உறங்கிய மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

பாம்பன் தெற்குவாடியில் நள்ளிரவில் தீவிபத்து: வீட்டிற்குள் உறங்கிய மூதாட்டி சாவு
X
தீப்பிடித்த எரிந்து நாசமான வீடு.

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி பகுதியில் உள்ள அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் பிலோமினாள். இருக்கு வயது 75. கடந்த சில வருடங்களுக்கு முன் இவரது கணவர் உயிரிழந்ததால் பிலோமினாள் அதே பகுதியில் குடிசை வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்த வருகிறார். பிலோமினாளுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர்.

இவர்களும் அதே பகுதியில் அருகருகே வீடுகளில் வசித்து வருகின்றனர். இரவு மழை பெய்ததால் பாம்பன் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் மண்ணெண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து மூதாட்டி பிலோமினாள் தனியாக குடிசை வீட்டில் தூங்கியுள்ளார்.

தூக்கத்தில் விளக்கை தட்டி விட்டதில் வீடு எதிர்பாராதவிதமாக தீப்பற்றி எரிந்தது. இதில் வீட்டுக்குள் உறங்கிய மூதாட்டி பிலோமினாள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் போனதாக சொல்லப்படுகிறது. இதனால் மூதாட்டி வீட்டிற்குள் தீ காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மூதாட்டி உயிரிழந்தார். தற்போது பிலோமினாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவில் தூங்கிய கொண்ருந்த மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Dec 2021 3:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?